வைணவங்கள் உரை- கடிதம்

அன்புள்ள ஜெ

நான் தற்செயலாக உங்கள் வைணவங்கள் என்னும் உரையை கேட்கநேர்ந்தது. எனக்கு அது ஒரு பெரிய தொடக்கம். நான் பிறப்பால் வைணவன். ஆனால் சென்ற 12 ஆண்டுகளாக வைணவம் என்று இல்லாமல் எந்தவிதமான இறைநம்பிக்கையும் இல்லாமல் வாழ்ந்து வந்தேன். அந்த நம்பிக்கை போனது எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு வெற்றிடம். அதை நிரப்ப நான் நாத்திகவேடம் போட்டு ஆத்திகர்களுடன் சண்டை போட்டுவந்தேன். விளைவாக என்னுடைய மனநிலையிலேயே ஒருவகையான சோர்வும் கசப்பும் நெகெட்டிவிட்டியும் உருவாகிவிட்டன.

அந்நிலையில்தான் இந்த உரை யூடியுபில் கண்ணுக்குப் பட்டது. அற்புதமான உரை. (ஒலிப்பதிவு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்) இந்த உரையில் என்னுடைய அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் ஒரு நவீன மனசுக்கு கன்வின்ஸ் ஆகிற மாதிரிச் சொல்லியிருக்கிறீர்கள். விஷ்ணுவின் வடிவம் இப்படி என எவர் கண்டார்கள்? அதை ஏன் நாம் காண முடியவில்லை? விஷ்ணு தெய்வம் என்றால் மற்ற தெய்வங்கள் எல்லாம் ஏன்? தெய்வங்கள் ஏன் நிறைய இருக்கின்றன? தெய்வங்களுக்குள் பூசல் என்கிறார்களே அதெல்லாம் என்ன? விஷ்ணு ஏன் இந்தியாவில் மட்டும் ஞானிகளுக்கு தெரியவேண்டும். இப்படி பல கேள்விகள் பட் பட்டென்று அறுந்துகொண்டன. ஆழமான உரை. நன்றி

ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகவிதைகளின் எளிமை,கடிதம்
அடுத்த கட்டுரைகுத்தி கேசவபிள்ளை