வெண்முரசு நீர்க்கோலம் நாவலில் வரும் நளன் தமயந்தி கதைப்பகுதியை இலக்கிய ஒலி சிவக்குமார் வாசித்திருக்கிறார். அவர் குரல் ஆழமானது. இயல்பாகவே உணர்ச்சிகள் குடியேறும் தன்மை கொண்டது. நான் இக்கதைவாசிப்பை எவரோ எழுதிய புதியகதை போல நேற்று கேட்டுக்கொண்டிருந்தேன். ஏக்கமும் துயரமும் வந்து சென்றன