இந்திரா பார்த்தசாரதி வலைப்பூ எழுதுகிறார். அவருக்கே உரிய மெல்லிய அங்கதம் ஓடும் எளிய நடைகொண்ட எழுத்து. சமீபத்திய பதிவில் சென்ற நூற்றாண்டில் Ronald Shegal எழுதிய ‘A crisis in India’ என்ற நூலில் இந்தியர்களுக்குக் குடிமை உணர்வு இல்லை, காரணம் தனிநபர்சார்ந்த மீட்பை மட்டுமே முன்வைக்கும் அத்வைதம் என்று சொன்னதன் மேல் தன் கருத்தை முன்வைக்கிறார்
ஆச்சரியமென்னவென்றால் ஒரு நூற்றாண்டு கழித்தும் இன்றும் அதே போல அதே குற்றச்சாட்டை வைக்கும் நம்மூர் அறிவுஜீவிகளுக்கு நீலகண்டன் அரவிந்தன் விரிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் இருபகுதிகளாக. அலைகள் ஓய்வதில்லை.