ஈழத்தில் அதன் அரசியல் அழிவை ஒட்டி அவர்களுக்கு உருவான ஒரு விழிப்புணர்வு தங்கள் பண்பாட்டை பதிவுசெய்யவேண்டும் என்னும் பதற்றம். அதை புலம்பெயர்ந்தோர் மிகச்சிறப்பாகவே செய்தனர். ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதில் ஆர்வமில்லை, அவர்கள் பெரும்பாலும் மேலைப்பண்பாட்டில் மூழ்கி விலகிச்சென்றுவிட்டனர். அது தவிர்க்கக்கூடியதுமல்ல. தமிழகத்தில் நம் கூத்துக்கலைஞர்களில் மேதைகள் பற்றிக்கூட ஆவணப்பதிவுகள் இல்லை. ஈழநாட்டு கூத்துக்கலைஞர்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்
தமிழ் விக்கி நா. சின்னத்துரை