ரஸ்ஸல் – கடிதங்கள்

மார்க்ஸியமும் ரஸ்ஸலும்

அறிவியல் விடுதலை அளிக்குமா?

அன்புள்ள ஜெ,

நேற்று கட்டுரையைப் படித்தவுடனே ஆச்சரியமளித்ததும், தோன்றியதும் இந்தக்கேள்விதான். மொழிபெயர்ப்பை இணைத்து அனுப்புகையில் இதைக் குறிப்பிட்டேன். தமிழ்ப் பதிப்புத்துறையின்/அறிவிக்க வரலாற்றின் ஒரு முக்கியப்பக்கம் இவ்வகை நூல்கள்.

விஜயகுமார்

*

அன்புள்ள ஜெ

நமக்கு இரண்டு பக்கங்களே உள்ளன. ஒன்று கண்மூடித்தனமான அறிவியல் எதிர்ப்பு. ‘சயன்ஸ் தோத்துப்போச்சு’ என்றே ஒரு கும்பல் சொல்லிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம், எல்லா முன்னேற்றமும் அறிவியலால் வந்தது என்று சொல்பவர்கள். அறிவியல் ஒரு கருவி. அதை பழமைவாதிகள் புறக்கணித்தனர். முன்னேற்றத்தை நாடுபவர்கள் கையிலெடுத்தனர். ஆனால் அறிவியலை கொடுங்கோலர்களும் சுரண்டல்காரர்களும் கையிலெடுக்க முடியும். அது பேரழிவை உருவாக்கும். அதை ரஸ்ஸல் முன்னுரைக்கிறார். இன்று உலகம் முழுக்க அறிவியல் அடக்குமுறையாளர்களின் சுரண்டல்நிறுவனங்களின் கருவியாக உள்ளது. உலகை அது சூழலை அழித்து குப்பைமேடையாக்குகிறது. ஜனநாயகத்தை அழிக்க தொழில்நுட்பம் உதவிசெய்கிறது. இதுதான் நடைமுறை உண்மை

ராகவன் ஜே.எம்

முந்தைய கட்டுரைகுலதெய்வத்திற்கு ஒரு கோயில் – அனந்தமுருகன்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா