கனடாவில் பாவண்ணனும் சாம்ராஜும்

இயல் மற்றும் கனடா இலக்கியத் தோட்ட விருதுகளுக்காக பாவண்ணனும் சாம்ராஜும் கனடாவுக்குச் சென்று இறங்கியிருக்கிறார்கள். விசா ஏற்பாடுகள் பற்றி பாவண்ணன் தொடர் பதற்றத்தில் இருந்தார். அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணம் என நினைக்கிறேன். சாம்ராஜ் மலேசியா, சிங்கப்பூருக்கெல்லாம் சென்றிருக்கிறார்.

கனடா அவர்களுக்கு இனிய அனுபவமாக அமையும். செல்வம் , என்.கே.மகாலிங்கம், சுமதி என ஆழ்ந்த இலக்கிய அறிமுகமுள்ள நண்பர்கள். அ.முத்துலிங்கம் என்னும் மூத்த படைப்பாளியைப் பார்க்கும் வாய்ப்பு.

நான் இவ்வாண்டு அக்டோபரில் அமெரிக்கா செல்கிறேன். அங்கே பூன் முகாம் மீண்டும் நிகழ்கிறது. அதற்கு முன் கனடா சென்று அ.முத்துலிங்கம் அவர்களைச் சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டு. விசாவுக்கான முயற்சிகளில் இருக்கிறேன்.

பாவண்ணனுக்கு கிடைத்திருக்கும் இயல்விருது முக்கியமானது. பாவண்ணன் தொடர்ச்சியாக சலிக்காமல் இலக்கியத்தில் செயல்பட்டு வருபவர். பிறருடைய ஆக்கங்களை வாசித்து மதிப்பிட்டுக்கொண்டே இருக்கும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் அரியவர்கள். பாவண்ணன் அவர்களில் ஒருவர்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைசித்ரரதன் கதை- நிர்மல்
அடுத்த கட்டுரைகாஞ்சி பெரியவர் சொன்னாரா?