கவிஞர் த பழமலய் 1988 வாக்கில் தமிழில் வெற்றுக் கவிதை (Plain Poetry) என வடிவரீதியாக குறிப்பிடப்பட்ட படிமமற்ற கவிதை வழியாக ஓர் அலையை உருவாக்கியவர். அவர் அவற்றை இனவரைவியல் கவிதைகள் என்கிறார். அடித்தள மக்களின் பண்பாட்டை அவர்களின் மொழிக்கு அணுக்கமாக சொல்லும் படைப்புகள் அவை.