சிலசமயம் கவிதைகள் கருத்து, படிமம், அனுபவப்பதிவு என ஏதுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட மனநிலைக்காகவே, அதைச்சொல்லும் மொழிப்பாவனையாலேயே கவிதைகளாகிவிடுகின்றன. இக்கவிதையிலுள்ள மொழியை கன்னட வீரசைவ வசனங்களை அல்லது அகிலத்திரட்டு அம்மானையை நினைவுறுத்தியமையாலேயே விரும்பினேன்
அடைய நினைக்கையில்
சாமானியன் ஆகிறேன்
மகா தேவரே
தாழ்ந்து தாழ்ந்து இருக்கையில்
உமதிடத்தில் இருக்கிறேன்
மகா தேவரே
உமது உயரத்தில் இருக்கிறேன் மகா தேவரே