பேசித் தீராது இராமாயணம், படித்துத் தீராது மகாபாரதம் என்பார்கள், மகத்துவம் வாய்ந்த அந்த பாரத காவியத்தை இளம் வாசகர்கள் எளிதாக படிக்கும் வகையில் நாவல் கட்டமைப்பில் எழுதிய ஜெயமோகனின் பணி பாராட்டுக்குரியது.
மேலோட்டமாக பார்த்தால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகார சண்டை போல தெரிந்தாலும், சிலந்தி வலைப் போன்ற பல்வேறு கதைகளை கொண்டது பாரதம், இதுகாறும் பெரிதாக பேசப்படாத கதைகளின் சில கதாபாத்திரங்களையும் முன்னிறுத்துகிறார் ஜெயமோகன். மலை தேசத்து இளவரசனான பூரிசிரவஸ், யாதவ குல இளவரசனான சாத்யகி ஆகிய இருவரை மையப்படுத்தி பேசும் வெண்முகில் நகரம் நூல்,
மூன்று பகுதிகளைக் கொண்டது. தங்களால் அவமானத்திற்கு உள்ளான துருபதனின் மகளையே மணம் புரிந்து பாஞ்சாலத்தில் தங்கியிருக்கும் பாண்டவர்கள், திரவுபதியை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பது முதல் பகுதியில் விவரிக்கப்படுகிறது. ஆண்களின் கதையை பேசினாலும் பாரதத்தின் அசைவுகள் பெண்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. கொற்றவையின் வடிவாக சூதர்களால் கணிக்கப்படும் பாஞ்சாலியின் எண்ணக்கூர்மை, தேவையான நேரத்தில் ரவுத்திரம் கொள்ளும் நேர்மை, ஐந்து சகோதரர்களையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் திறமை எல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இரண்டாம் பகுதியில்
கர்ண, அர்ச்சுனனுக்கு இணையான வில்லாளியான பூரிசிரவஸ் எவ்வாறு அரசியல் காரணங்களால் கௌரவர்களின் அணியில் சேர்ந்து இரண்டாம் பாஞ்சால யுத்தத்தில் பங்கேற்றார் என்ற கதை விவரிக்கப்படுகிறது. குருட்சேத்திரத்தில் பூரிசிரவஸ் களப்பலியாகும் நிகழ்வு உணர்வுப்பூர்வமானது, வேறு தொகுதியில் வரலாம் என்று நினைக்கிறேன்.
மூன்றாம் பகுதியில் கண்ணனின் தோழனாக,அமைச்சராக இணையும் சாத்யகியின் பார்வையில் துவாரகை நகரின் பிரம்மாண்டம், அதன் கட்டமைப்பு நேர்த்தி, கடல் வணிகத்தில் உச்சத்தில் இருந்த விவரணைகள் கூறப்படுகின்றன. மகாபாரத இதிகாசத்தில்
ராஜன் யயாதி
வாசிப்பை நேசிப்போம் குழுமம்