பாலா, முன்று கதைகள்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

தமிழ் விக்கியில் பாலாமணி அம்மாள் பதிவை வாசித்தபோது 1900-களிலேயே இப்படியொரு ஆளுமையுடன் பெண் இருந்திருக்கிறாரே என்ற வியப்பும் அவருடைய இறுதிக் காலத்தை அறிந்தபோது பெரும் துயரமும் ஏற்பட்டது.

மொத்த வாழ்நாட்களையும் கலைக்காகவும் அதைக்காணும் மக்களுக்காவும் அர்பணித்தவரின் இறுதிக் காலம் எல்லோராலும் கைவிடப்பட்டு நிர்கதியாய் முடிந்தது என்பது மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இப்படி முடியக்கூடாது முடியக்கூடாமென மனதில் ஒரு அரற்றல் தொடர்ந்தது. அவரது வாழ்வை வேறு பார்வையில் புனைவாக்கிட பெரும் உந்துதல் தோன்றியது. அதே உந்துதல் ரம்யாவிற்கும் கமலதேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. முதலில் ரம்யா பாலாமணி அம்மாள் புகழின் உச்சத்தில் இருந்த தருணத்தை ட்ராமா குயின் என்ற சிறுகதையாக எழுதினார். கமலதேவி பாலாமணி அம்மாள் வாழ்வில் நிகழ்ந்த வீழ்ச்சியின் தருணத்தை பாலாமணி பங்களா என்னும் சிறுகதையாக எழுதினார். ஒருவரின் வாழ்வில் நிகழும் பல தருணங்களில் எதை எழுவதென்று எழுத்தாளர் எப்படி எப்போது தேர்ந்தெடுக்கிறார் என்பதை யாரால் அறுதியாகக் கூறிடமுடியும். பாலாமணி அம்மாளின் இறுதி கணத்தை எழுதுவது எனக்காக விடப்பட்டுள்ளதாக தோன்றியது.

ஒரு கலைஞன் நிர்கதியாய் மரணிப்பதை ஏற்காத என் மனதின் துடிப்பால், பாலாமணி அம்மாளின் வாழ்வு மங்களமாக முடிவடைந்தது எனக் காட்டும் வகையில் மங்களம் என்னும் சிறுகதையை எழுதியுள்ளேன். இக்கதை இம்மாத( மே 2023 ) அகழ் இதழில் வெளிவந்துள்ளது. ஒரு பெருங்கலைஞரின் வாழ்வை மூன்று சிறுகதைகள் வாயிலாக அருகில் அணுகிப் பார்க்க முயன்றுள்ளோம். இதனை மொத்தமாக தொகுத்து நாவலாக யாரேனும் எழுதவும் கூடும்இதை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தோன்றியது. மலர்களெல்லாம் இறைவனின் திருவடியை எண்ணியே மலர்கிறது என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

   அன்புடன்
கா. சிவா

இணைப்புகள்

பாலாமணி அம்மாள் தமிழ் விக்கி
ட்ராமா குயின்ரம்யா
பாலாமணி பங்களாகமலதேவி  
மங்களம்காசிவா

முந்தைய கட்டுரைகே.சி.நாராயணனின் உலகம்
அடுத்த கட்டுரைசெங்கோல், கடிதம்