பொன்மிளிர் வழி, கடிதம்

பொன்னிறப்பாதை மின்னூல் வாங்க 

ஒளிரும்பாதை வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு,

நேற்று இரவு ஒரு இளம் நண்பர் தன் ஐந்து வருட காதல் தோல்வி, வாழ்க்கை சார்ந்த அச்சம், குற்றவுணர்வுகளை குறிப்பிட்டு தான் குழப்பத்திலும் மனச்சோர்விலும் இருப்பதாக தெரிவித்தார். உங்கள் ‘பொன்னிறப்பாதை’ புத்தகத்தை குறிப்பிட்டு நான் அதற்கு பதிலளித்தேன்.

நேற்று உங்கள் தளத்தின் முதல் பதிவே ‘பொன்னிறப்பாதை’ பற்றியதாக இருந்தது. உண்மையில் நீங்கள் சொல்லியது போல இது போன்ற நூல்களின் தேவை நினைத்ததை விட அதிகமாக இருப்பதை நான் பார்த்த அனுபவங்களின் மூலமே சொல்ல முடியும்.

பல்வேறு கோணங்களில் இன்றைய இளைஞர்களுடன் நீங்கள் விவாதிக்கும் கட்டுரைகள் மேலும் மேலும் தொகுக்கப்பட வேண்டும்.

இளம் நண்பருக்கு நான் அளித்த பதில்:


இது சார்ந்து நான் அட்வைஸ் எதுவும் சொல்ல விரும்பல. ஏன்னா நான் இதுவரை இந்த மாதிரி 5 வருட காதல்பிறகு பிரிவு எதுவும் அனுபவித்ததில்லை. என் தேடல்கள் வேறாக இருந்து கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம்.

ஆனால் வாழ்க்கை சார்ந்த குழப்பங்கள் வந்திருக்கிறது. பெரிய தனிமை. கிட்டத்தட்ட மனப்பிறழ்வுக்கு அருகில் சென்றிருக்கிறேன். அனேகமாக கல்லூரி இறுதி ஆண்டுகள் மற்றும் அதை தொடர்ந்த ஓரிரு வருடங்கள். அதாவது இப்போது நீங்கள் இருக்கும் அதே வயதில். ஆனால் எல்லாம் கலங்கி தெளிந்து விட்டது. பல நண்பர்களும் இந்த வயதில் தான் சிலவற்றை கடந்து தெளிவு பெற்றதாக சொல்லியிருக்கிறார்கள்இன்றும் பார்க்கும் வேலை சார்ந்த சிக்கல்கள்….போன்றவற்றை எல்லாம் எனக்கும் உண்டு. ஆனால் எந்த குழப்பங்களும் இல்லை. அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க நாம் வந்த வேலையை முடிந்தவரை சிறப்பாக செய்து முடிப்போம் என்ற எண்ணமே உள்ளது. நிறைய வேலைகள் பாக்கி இருக்கிறது. ஒரு வகையில் எழுத்தாளர் ஜெயமோகனின்பொன்னிறப்பாதை‘(தன்மீட்சி) புத்தகம் வாசித்தது எனக்கு பெரிய அளவில் என்னை மீட்க துணை புரிந்தது.

தவறுகளும் குற்றவுணர்வுகளும் மட்டும் வாழ்க்கை அல்ல. அது வாழ்க்கையின் பகுதிகள் மட்டுமே. வாழ்க்கை பற்றிய அச்சம் இந்த வயதில் இருப்பது சாதாரணம். உண்மையில் அச்சம் என்பது நாம் செயல்படுவதற்கான மிகப் பெரிய விசையை அளிக்க கூடியது. ஆனால் அதில் அப்படியே உறைந்து இருப்பதா இல்லை செயல்படுவதா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஜெயராம்

பொன்னிற வெளிச்சம்

பொன்னிறப்பாதை- வண்ணதாசன் கடிதம்

முந்தைய கட்டுரைபுனைவுக் களியாட்டுக் கதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகூறைநாடு நடேச பிள்ளை