பீத்தோவன் இசை அறிமுகம்

மேலையிசையில் பீத்தோவன் ஒரு திருப்புமுனை. ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிற்பிகளில் ஒருவர். மேலைச்சிந்தனை மரபுடன் இணைத்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய கலைஞர்.

அஜிதன் பீத்தோவனயும் அவரது இசையையும் அறிமுகம் செய்யும் பொருட்டு நடத்திய பயிற்சிவகுப்பு ஏற்கனவே நிகழ்ந்தது. மிக வெற்றிகரமான ஒரு நிகழ்வு அது. அதை மீண்டும் நிகழ்த்தவேண்டும் என்னும் கோரிக்கை வந்தது.

ஆகவே வரும் ஜூன் 9 10 11 தேதிகளில் அவ்வகுப்பு மீண்டும் நிகழும். மிகத்தொடக்க நிலையில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பணம் கட்ட முடியாத இளைஞர்களுக்கு புரவலர் கண்டடையப்படுவார்கள்.

விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பெயர், வயது, ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா
அடுத்த கட்டுரைகவிதையும், ரசனை மதிப்பீட்டின் எல்லையும்