நவகண்டம்

அன்புள்ள ஜெ,

காவல் கோட்டம் அட்டைப்படத்தில் உள்ள நவகண்டம் கொடுக்கும் பெண் சிலையின் அபூர்வத்தன்மையைப் பற்றிக் கூறியிருந்தீர்கள் (டொரண்டோ அருங்காட்சியகம் பதிவில்). எங்கள் ஊர் (தென்கரை, சோழவந்தான் அருகில், மதுரை மாவட்டம்) சிவன் கோயிலின் முன்புள்ள களத்தில் அப்படி ஒரு சிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. தொல்லியல் துறை சார்பாகப் பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு, கோயிலைச் சேர்ந்த தேவரடியார் பெண் அது என்றும், மற்றும் பல வரலாற்றுத் தகவலும் தொகுக்கப்பட்டுப் ‘பராக்கிரமபாண்டியபுரம்’  என்னும் தலைப்பில் தனிநூலாக வெளியிட்டுள்ளது (மதுரை நாயக்கர் மகாலில் நூல் கிடைக்கும்). சிலை வெட்டவெளியில், முக்கியத்துவம் அறியப்படாமல் இருந்தாலும், உள்ளூர் மக்கள் அதையும் தெய்வமாகவே பாவிப்பதால், அவ்வப்போது படையலும், புதுத்துணியும் பெற்று 1000 ஆண்டுகளாக அழியாமல் உள்ளது. களம் சிமிண்ட் போடப்பட்டு நவகண்ட பெண் கால் புதைந்து நிற்கும் காட்சியும் இத்துடன் இணைத்துள்ளேன்.

மேலும் விவரங்கள் http://thenkarai.blogspot.com/
நன்றி,
பிரகாஷ்.

 

ஒண்டேரியோ அருங்காட்சியகம்

அம்மன் வழிபாடும் தற்கொலைப்போராளிகளும்

 

முந்தைய கட்டுரைசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகருணா