தமிழகத் தாவரவியலை ஆய்வுசெய்த முன்னோடிகளில் ஒருவர் ஆல்பர்ட் பௌர்ன். அவருடைய குடும்பமே இந்திய தாவரவியலுக்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்டது. ஆல்பர்ட் பௌர்ன் எமிலி டிரீ கிளேஷேர் ஐ 1888-ல் மணந்துகொண்டார். அவர்களுக்கு ரே என்னும் மகனும் லோரா என்னும் மகளும் பிறந்தனர். தன் ஆசிரியரான ரே லங்காஸ்டரின் நினைவாக ஆல்பர்ட் பௌர்ன் மகனுக்கு ரே என பெயரிட்டார். ரே இந்திய வனத்துறையில் பயிற்சி எடுத்து பின்னாளில் ஆக்ஸ்போர்ட் பல்கலைப் பேராசிரியராக ஆனார். லோரா இந்திய வனத்துறை அதிகாரியான ஸ்டீபன் காக்ஸை மணந்தார்.
ஆல்பர்ட் பௌர்ன்
