நோயும் மருந்தும், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்;

என் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!அஜிதனின் மைத்ரி-யை இன்னும் படிக்கவில்லை. அதற்கான அற்பக் காரணங்கள்;ஜெயமோகனின் மகன் என்பதால் எல்லோரும் மைத்ரியை பாராட்டுகிறார்கள் ?அஜிதன் எழுதியதை ஜெயமோகன் திருத்தியிருப்பார் ? அதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவு சொன்னாலும், மனம் சஞ்சலம் கொள்கிறது.ஒரு வேளை ஜெயமோகனை விட நன்றாக எழுதியிருந்து, எனக்கு ஜெயமோகனைப் பிடிக்காமல் போய்விட்டால் ? – இது கொஞ்சம் அதிகம்?

புத்தகக் கண்காட்சியில் அஜிதனைப் பார்த்தேன் – விஷ்ணுபுரம் நாவலை வாங்கிவிட்டு அதற்கு பணத்தை அஜிதனிடம் தான் கொடுத்தேன். ‘அப்பா வரவில்லையா’ என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன். கூட வந்திருந்த என் மகனிடம், இவர் தான் ஜெயமோகனின் மகன் என்று சொன்னதற்கு அவன் ‘ஆரஞ்சுப் பழத்தின் சாறை மட்டும் சாப்பிட்டவர்தானே (தன்னறம்)’ என்று கேட்டான். அவன் அதை நினைவில் வைத்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.

அஜிதன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே தான் மைத்ரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றை வாங்கி அஜிதனிடம் கையெழுத்து வாங்கியிருந்தால் குழந்தை மகிழ்ந்திருப்பானென்று தோன்றியது. ஒருவகையில் நான் அவனுக்கு சித்தப்பாவல்லவா என்றும் தோன்றியது. ஆனால், அஜிதன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக சிரித்த முகத்துடன் இருந்தார். இன்றுபோல் என்றும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டுமென மனதிற்குள் வாழ்த்தினேன்.

விஷ்ணுபுரம் இது மூன்றாவது முயற்சி – இரு முறை நூலகங்களில் எடுத்து இருபது முப்பது பக்கங்களைத் தாண்ட முடியவில்லை. வீட்டிலேயே கையருகில் இருந்தால் முடித்துவிடுவேனென்று நினைக்கிறேன். இன்னொரு பெரிய கடிதம் எழுதி பாதியில் இருக்கிறது, அஜிதன் முந்திவிட்டார்.

அன்புடன்,
கணேசன்.

அன்புள்ள ஜெ

அஜிதனின் மைத்ரி நாவலை சற்றுமுன்னர்தான் வாசித்து முடித்தேன்.சில நாவல்கள் வாசிப்பில் அப்படியே ஈர்த்து உள்ளே வைக்கும். சில நாவல்கள் நம்மை நாமே செலுத்திக்கொள்ளவேண்டும். மைத்ரி அப்படிப்பட்ட நாவல். ஒரு ரொமாண்டிக் நாவல். கவித்துவமானது. அந்தக் கவித்துவத்தை நின்று நிதானித்து நம்மை செலுத்திக்கொண்டுதான் வாசிக்கமுடியும். அப்படி வாசித்தால்தான் அது நம் கைக்குச் சிக்கும். ரொமாண்டிக் நாவல்களுக்கு பொதுவாக கதை என்பது ஒரு broader template தான். இந்த வகை நாவல்கள் உலகமெங்கும் பெரிய கிளாஸிக்குகள்கள் உள்ளன. கதேயின் The Sorrows of Young Werther னட் ஹாம்சனின் Victoria எல்லாம் மிகச்சிறந்த கிளாசிக்குகள்.. அவை எளிமையான கதைக்குள் கவித்துவமான சிலபடிமங்கள் வழியாகச் செல்பவை.

ஃப்ரோஸ்டின் இந்த வரியை நினைத்துக்கொண்டேன். காலம் பூரா மனிதன் இப்படி ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறான்

Nature’s first green is gold,
Her hardest hue to hold.
Her early leaf’s a flower;
But only so an hour.
Then leaf subsides to leaf.
So Eden sank to grief,
So dawn goes down to day.
Nothing gold can stay.

பாரதியின்

சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

வரிதான் முறிமருந்து

அஜிதனுக்கு ஒரு hugs

அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைராஜகோபாலன், டான் யுவான்
அடுத்த கட்டுரைதஞ்சை பிரகாஷ்