அமெரிக்காவில் ஒளிர்ந்த காந்தியப் பேரொளி- அரவிந்தன் கண்ணையன்

காந்தி எப்படி டால்ஸ்டாய், மலை பிரசங்கம், தோரூ என்று பலரிடமிருந்து கற்றாலும் தன் இந்து பண்பாட்டு மரபில் அவற்றை பொருத்தி மீள் உருவாக்கம் செய்து கொண்டாரோ அதே போல் மார்டின் லூதர் கிங் போன்றவர்களும் தங்கள் பண்பாட்டு தளத்திலிருந்த கருத்துகளில் காந்தியத்தை கலந்து தான் மீள் உருவாக்கம் செய்து கொண்டனர். காந்தியும் மார்டினும் ஒருவர் மரபிலிருந்து இன்னொருவர் பெற்றும் கொடுத்தும் மானுடம் உய்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்த மகான்கள் என்ற அளவில் தான் நான் புரிந்துக் கொள்ள வேண்டும். இன்று இந்தியாவின் தலித் செயல்பாட்டாளர்கள் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களின் போராட்டங்களில் இருந்து கருத்துகளைப் பெற்று இந்தியாவில் முன்னெடுப்புகள் செய்வதும் இந்த அபாரமான தத்துவ பரிமாற்றத்தின் ஒரு அங்கம்.

அமெரிக்காவில் ஒளிர்ந்த காந்தியப் பேரொளி- அரவிந்தன் கண்ணையன்

முந்தைய கட்டுரைகற்றலை அளிப்பது
அடுத்த கட்டுரைமதி வழிப்பயணம்- “ஜீன் மெஷின்” நூலை முன்வைத்து