குருகு – வளவதுரையன்

குருகு இதழ்

குருகு இணைய இதழ் மூன்றாம் இதழ்  தமிழில் யாரும் தொடாத தளங்களைத் தொட்டுச் செல்கிறது. புதிய இதழில்

தாமரைக்கண்ணனின் “செவ்வேள் ஆடல்-2” தொடர்கட்டுரையில் அவரின் முழு உழைப்பும் தெரிகிறது.சோமாஸ்கந்தரைப் பற்றி ஒரு முனைவர் பட்ட ஆய்வு நடத்தி விடுகிறார்.

திருவண்ணாமலையில் மூர்த்திகளின் புறப்பாட்டில் சோமாஸ்கந்தரைத் தொடங்குகிறார்.முன்னுரையாக உலோக மற்றும் பாறை ஓவியங்கள் தோன்ற ஆதிமனிதனின் கனவில் தோன்றிய உருவங்களே காரணம் என்கிறார்.

மகாபலிபுரம் தர்மராஜா இரதத்தில் உள்ள சோமாஸ்கந்தரைக் குறிப்பிட்டுள்ளார். இனி போனால் அவ்வுருவைப் பார்க்க வேண்டும்.காஞ்சிபுரம், தச்சூர்,திருப்பைஞ்சீலி, திருப்பரங்கின்றம், போன்ற திருக்கோயில்களில் உள்ள சோமாஸ்கந்தர் பற்றி விரிவாகக் கூறுகிறார்.

89 அகவை கொண்ட ஓ.ரா.ந கிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் பௌத்தம் பற் றிய பல புரிதல்களுக்கு வழி வகிக்கிறது. நேர்காணல் கண்ட அனங்கனின் வினாக்கள் தெளிவானவை, கூர்மையானவை.

சாங்கியத்தைப் புரிந்து கொள்ள கிருஷ்ணனுக்கு மணிமேகலையின் 27-ஆம்காதை–சமயக்கணக்கர் தந்திரம் கேட்ட காதைதான்  உதவியது என்கிறார்.பௌத்தம் பிராமணியத்துக்கு எதிராக இருந்ததும் அது மறைய ஒரு காரணம் என்கிறார். புத்தரின் நடுவழி என்பதை அருமையாக நேர்காணல் விளக்குகிறது. அதாவது அதிகக் கோபம் கூடாது. கோபம் கட்டுக்குள் இருக்கவேண்டும். கோபப்படாமலும் இருக்கக்கூடாது என்கிறார்.

தாம் எழுதிய பௌத்த பைபிள் பற்றியும் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். இறுதியில் பௌத்தம் இனி எழுச்சி பெறாது. காரணம் இந்துமதம் இங்கு ஆழமாக ஊன்றிவிட்டது என்று பெருந்தன்மையோடு ஒப்புக்கொள்கிறார்.இவை சில துளிகளே.  மற்ற கட்டுரைகளை இனி படிக்க வேண்டும்

வளவ துரையன்

முந்தைய கட்டுரை யோகம் – சங்கல்பத்தின் பெரு நதி- கடிதம்
அடுத்த கட்டுரைஏர்னஸ்ட் கோர்டான்