இமையம், அவதூறு – கடிதம்

இமையம் சொல்லும் அவதூறு…

அன்புள்ள ஜெ!

‘இமையம் சொல்லும் அவதூறு’ குறித்து தங்களின் கட்டுரையை படித்தேன். இதற்குமேல் தெளிவாக எப்படி சொல்வது. தரவுகளுடன் விளக்கமாக இருக்கிறது. நான் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு ‘ ஜெயமோகன் சாரிடம் ஏதாவது விவாதிக்க வேண்டுமென்றால் அவரைவிட அதிகம் வாசித்து பேசு பொருள் குறித்த தரவுகளுடன் சென்றால்தான் அவரை எதிர்கொள்ளமுடியும்’ என.இப்போதும் அதுவே சரியென நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் விமர்சனம் செய்தவர்கள் எவரும் இந்த கட்டுரையை வாசித்திருக்கமாட்டார்கள். ஆயினும் பிரச்சாரம் செய்யப்படும். இதையெல்லாம்  கடக்கும் உறுதியான உறுதி உடையவர் நீங்கள்‌ என்பது தெரியும். தொடர்க ! ஒரு கணம் கூட சோர்ந்து விடாதீர்கள். வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்

பார்த்திபன்.ம.

காரைக்கால்

அன்புள்ள ஜெ

இமையம் பற்றிய கட்டுரை கண்டேன். உங்கள் ஆற்றாமை புரிகிறது. முப்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இமையத்தை ஒரு முக்கியமான படைப்பாளியாகச் சொல்லி வருகிறீர்கள். கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். அவர் விருதுபெறும் ஒவ்வொரு முறையும் மனமார வாழ்த்தியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வாழ்த்திலும் அவர் அளித்த பங்களிப்பைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

அவர் பெற்ற சில விருதுகளில் உங்கள் பங்குண்டு என்று அறிந்திருக்கிறேன். ஒரு விருதுக்கு அவர் பெயரை பரிந்துரைத்து நீங்கள் எழுதிய குறிப்பை நானே வாசித்ததும் உண்டு.

ஆனால் அவர் இப்படி ஒரு பழியை உங்கள்மேல் சுமத்துகிறார்.  இமையம் தகுதிக்கு பலமடங்கு மீறி பாராட்டப்பட்ட எழுத்தாளர். தமிழில் இலக்கியவாதிக்குக் கிடைக்கும் எல்லா விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். அவர் பெற்ற விருதுகளில் பாதிகூட நீங்கள் பெறவில்லை. ஆனால் அவர் தன்னை பாதிக்கப்பட்டவர் என்ற பாவனையில் பேசுகிறார்

இமையத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லவேண்டும் என்று இமையமே எழுதி இரண்டு சாட்சிகளுடன் கையொப்பம் போட்டு வெளியிட்டால் மற்றவர்களும் அதைச் அப்படியே சொல்லலாம். பிரச்சினை இருக்காது.

செ. சிவக்குமார்

முந்தைய கட்டுரைவேலை, கடிதம்
அடுத்த கட்டுரை‘கவிதைகள்’ சதீஷ்குமார் சீனிவாசன் சிறப்பிதழ்