நூல்கள்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் ‘நிகழ்தல்’ அனுபவக்குறிப்புகள் நூல்ழை நேற்றுத்தான் வாசித்து முஇத்தேன். ஒரு பார்வையில் அதுவும் அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நூலும் ஒரே தளத்தைச் சேர்ந்தவை என்று தோன்றின. இரண்டுமே முக்கியமான நூல்கள். அவரது நூல் வாழ்க்கைமேல் ஈடுபட்டையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் பாஸிட்டிவ் ஆன நூலாக இருந்தது. உங்கள் நூல் வாழ்க்கையை உணர்ச்சிகரமாக ஆராய்ச்சி செய்யும்  நூல். சிறப்பாக இருந்தது.

ஆனால் அ.முத்துலிங்கம் அவரது நூலை நாவல் என்கிறார். அப்படிப்பார்த்தால் உங்களுடைய இந்த நூலையும் நாவல் என்று சொல்லிவிடலாம். ஏன், சுரா நினைவின் நதியில் நூலையும்கூட ஜே.ஜே.சிலகுறிப்புகள் போன்ற ஒரு நாவலாக வாசிக்கலாம். நிறைய கட்டுரைகள் என்னை மிகவும் பாதித்து நெடுநேரம் சிந்தனையில் ஆழ்த்தின. ஒரு பெருமூச்சுடன் வாசித்துமுடிக்கச்செய்யும் நூல். உறவுகளின் சிக்கலைப்பற்றிய பெரிய ஒரு பதிவு என்று சொல்லலாம்

இந்த கட்டுரையை வாசித்தீர்களா?

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60902191&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60902192&format=html

செல்வன்

 

அன்புள்ள செல்வன்
நன்றி

அந்த கட்டுரை அ.முத்துலிங்கம் உயிர்ம்மை இதழில் எழுதியது. வசித்தேன்.

என் கட்டுரைகள் புனைவாக ஆக்கமுடியாத வாழ்க்கைத்துளிகளை சார்ந்தவை. புனைவு அவற்றில் உள்லது. உண்மை நிகழ்ச்சிகளை காட்சியாக ஆக்குவதற்கான புனைவுகள் மட்டுமே

வாழ்க்கையே ஒரு பெரும் புனைவு என்றும் சொல்லலாம்
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
  நலம் அறிய விருப்பம் : உங்களுடைய நிழல் வெளி கதைகள் படித்தேன். படித்து கொண்டிருக்கும் போதே (டேய்; யாராவது பார்க்க போறாங்க ; மூஞ்சிய ஒழுங்கா வெச்சிகிட்டு படி என்று நினைவு வந்து சொல்லி கொண்டேன்) தூக்கி போடுது ;மலை பாதையில் உயிரை பத்தி கவலைபடாம பைக்ல டிரைவ் பண்ற உணர்வ தந்துது பெரும்பாலான கதைகள்
 இதுல ஒரு புணரும் நிலையில் ஒரு பெண்ணோட “வாய் பன்னி வாய் மாதிரி ஆகுது தாங்கமுடியாத நாத்தம் வந்து கொண்டே ”   அத மனசில சித்திரமா கொண்டு வர முடிகிறதா உங்களால் ; மிக பயங்கரமான உவமை ;நேர்ல உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகம் பற்று புலம்புகிறேஅன்.
செந்தில் ; நுங்கு குடித்தனம் ; டையூ ; ஓவிய வீடு ; ஏக்நாத் மான்சன் ; இது எல்லாம் படிமம் மாதிரீ உள்ள இறங்கிவிட்டது ;
“திற்பரப்பு அருவிக்க கீழ  வெச்ச சொம்புல்ல படிச்சவ மனசு ?அருவீ விழுந்த வேகத்தில ஒரு காலும் அது நெறையாது அதாக்கும்”- என்று சொல்ல வைத்து பொசுக்கு என்று புத்தகம் முடிந்து விட்டது ஒரு வேளை தினேஷ் இந்த பத்து கதைகள்   போதும் இந்த மாதிரி கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறீர்களோ ? .

Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்,

இந்த தொகுதி ஒரு குறிப்பிட்ட மனநிலையில் தொடர்ச்சியாக எழுதிய கதைகள். இந்தவகையான கதைகள் என் பெருந்தொகையில் மேலும் இருக்கின்றன.

இவை மனித மனத்தில் உள்ள அச்சம் அருவருப்பு போன்ற ஆதார உணர்ச்சிகளை ஆராய்பவை. மனிதன் பிரபஞ்சத்தை பார்க்கும் நிலையின் கரிய பக்கங்களை நோக்கி திறக்கக் கூடியவை. இவற்றின் பல கதைகளில் பல உளவியல் செய்திகள் படிமங்களாக உள்ளன என்று எண்ணுகிறேன்

ஜெயமோகன்

 

ஜெயன், உங்கள் எழுத்தை கடந்த ஒரு வருடமாய் படித்து வருகிறேன், காடு படித்து விட்டு இரு வரி mailஅனுப்பி இருந்தேன். பின் எஸ். ரா நூல் வெளியீட்டு விழாவில் உங்களை சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்ககலாம். உங்களது “ஆழ் நதியை தேடி” படித்தேன். பல கேள்விகளுக்கான விடையை அழகாய் விளக்கி இருந்தீர்கள். சமீபத்திய தங்களது “மதுபாலா” இடுக்கை மிக அழகு. என் கேள்விகளுக்கான பதில்களை முடிந்தவரை உங்கள் படைப்பு களிலே தேடி கொண்டு இருக்கிறேன். மீறிய சிலவற்றை கண்டிப்பாக உங்களிடம் கேட்க வருவேன்.

 

சுஜாதா விற்கு பின் உங்களின் எழுத்தையும், எஸ். ரா அவர்களின் எழுத்தையுமே மிகவும் விரும்பி படித்து வருகிறேன். முடிந்த வரை அத்தனை புத்தகங்களையும் !!.. உங்கள் நாவல்களின் சிபாரிசும், தொடர்ந்து நீங்கள் விவாதித்து வரும் கருத்தும் மிக அழகு. “மதுபாலா” கட்டுரை அறிமுக படுத்தியததில் எங்கள்
Company Blog ல் அத்தனை சிறப்பான வரவேற்ப்பைய் பெற்றது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நான் Biotechnology
 படித்து விட்டு தற்போது Cognizant Technology Solutions (CTS) என்னும் மென் பொருள் Companyல் வேலை செய்கிறேன். Biochemistry,Molecular Biologyல் Ph.Dசெய்வதற்கு University
Results காக காத்து கொண்டு இருக்கிறேன்.

Madhankumar.S

அன்புள்ள மதன்

நன்றி.

உங்கள் ஆராய்ச்சிக்கு விரைவில் வாசல்கள் திறக்கட்டும்.  நாவல்களை வாசித்துவிடு எழுதுங்கள்.

ஐன்ஸ்டீன் அவரது அதி தீவிரமான ஆய்வுகளுக்கு நடுவேயும் தொடர்ச்சியாக நாவல்கள் வாசித்தார். அவருக்கு தச்தயேவ்ஸ்கி மீது பெரும் பிடிப்பு இருந்தது. அதேபோல ஜகதீஷ் சந்திரபோஸுக்கு வங்க இலக்கிய ஆர்வம் இருந்தது

இலக்கியம் ஏதோ ஒருவகையில் ஆய்வுகள் போன்றவற்றில் உள்ள கடுமையான தர்க்கநிலையை சமன்செய்கிறது
ஜெ

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 9
அடுத்த கட்டுரைகடிதங்கள்