குருகு இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு,  ‘‘குருகு’’ மூன்றாவது இதழ் வெளிவந்துள்ளது. சென்ற மாதம் வெளியான  “தியோடர் பாஸ்கரன் சிறப்பிதழுக்கு” வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
இந்த இதழில் பௌத்த தத்துவ அறிஞர் ஓ. ரா. ந. கிருஷ்ணனின் நேர்காணல் இடம் பெறுகிறது, இன்றுள்ள தமிழ் பௌத்த அறிஞர்களில் கிருஷ்ணன் முதன்மையானவர். நாராயண குரு இயற்றிய தத்துவ பாடல்களில் ஒன்றான ‘தெய்வ தசகம்’  பிரபஞ்சம் தழுவிய பிரார்த்தனைப்  பாடல்.  அதே குரு மரபைச் சேர்ந்த  ‘நித்ய சைதன்ய யதி’  தசகத்திற்கு எழுதிய உரை ஆனந்த் ஶ்ரீநிவாசனால் இந்த இதழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
‘ஆடல்’ தொடர் குழந்தை முருகனின் ஆடலை அணுகி நோக்கும் கட்டுரையாக விரிந்துள்ளது. ஓவியர் ஜெயராம் அழியக்கூடிய பொருள்களால் ஆகும் கலை பற்றிய   கட்டுரையை எழுதியுள்ளார்.
அன்புடன்
 குருகு

குருகு இதழ்

முந்தைய கட்டுரைசவார்க்கர், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெ.இராசு