வ.வெ.சுப்ரமணிய ஐயர்

இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழ் என்ற வழக்கு பொதுவானதே தவிர சாகுந்தலம், மிருச்சகடிகா போன்ற நாடகங்கள் தமிழில் இல்லை என்பதை முதலில் கூறியவர் வ.வே.சுப்ரமணிய ஐயர். பிற இந்திய மொழிகளில் காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு வந்துவிட்டது என்பதைத் தமிழ்ப் பண்டிதர்கள் உணரவில்லை என்பதும், தமிழறிந்த ஆங்கில அறிஞர்கள் தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்வதில்லை என்பதும் வ.வே.சுப்ரமணிய ஐயரின் நிலைப்பாடாக இருந்தது.சமகால இலக்கியத்தை இவர் புத்திலக்கியம் என்ற சொல்லால் குறித்தார். மூன்றாம்தர இலக்கியத்தின் தன்மைகளில் ஒன்று அறக்கருத்துக்களைச் சொல்லிக்கொண்டே போவது என்ற கருத்தக் கொண்டிருந்தார். புத்திலக்கியத்தில் உபதேசம் (பிரச்சாரம்) மீறி ஒலிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

வ.வெ.சுப்ரமணிய ஐயர்

வ.வெ.சுப்ரமணிய ஐயர்
வ.வெ.சுப்ரமணிய ஐயர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவழி, பயணத்துக்கான ஓர் இணைய இதழ்
அடுத்த கட்டுரைபரிவின் கடல்