செந்தில்குமார் தேவன்,முனைவர் பட்டம்

அன்புள்ள ஜெ,

கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோலாகல கொண்டாட்டங்களுடன்  டாக்டர் பட்டம் பெற்றேன்.

முன்னதாக நடந்த PhDக்கான இறுதி தேர்வில், 30 நிமிட உரை, அதன்பின் 30நிமிட விவாத அரங்கு. அத்தனை கேள்விகளையும் சிறப்பாக எதிர்கொண்டு distinctionடன் தேர்ச்சி பெற்றேன். எனது பேராசிரியர், இன்றைய நாள் உன்னுடைய ஷோ. மொத்த அரங்கையும் கட்டியாண்டாய் என்றார்.

மேலும் தேர்வு கமிட்டியில் இருந்த அத்தனை பேரும் இம்ப்ரஸ்ட். நான் சிறப்பாக விவாதித்ததாக தெரிவித்து Distinction marks வழங்கினார்கள் என்றார். German விஞ்ஞானிகளிடம் distinction வாங்குவது ஒரு கவுரவம்தானே.

ஆராய்ச்சி உலகில் நீண்டகால உழைப்பிற்குபின் இப்போதுதான்  அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது துவக்கம் தான். நான் இனிதான் எனக்காக இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சோர்வடையும் போதெல்லாம் உங்கள் எழுத்துக்களே எனக்கு வினையூக்கி,  செயல்களே முன்னுதாரணங்கள். உங்களை வாசிக்க ஆரம்பித்து உங்கள் வழியாக ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘கிரேடஸ்ட் ஷோ ஆன் எர்த்’ நூல் அறிமுகம் ஆனபின்னரே எனக்கு உயிரியல்/அறிவியல ஆராய்ச்சியில் உண்மையான ஆர்வம் வந்தது.

இன்றைய வெற்றிக்கு உங்கள்  டிரெயினிங் ஒரு முக்கிய காரணம்.

என்றும் அன்புடன்,

Dr. செந்தில் குமார் தேவன்.

அன்புள்ள செந்தில்குமார் தேவன்

இப்போது நீங்கள் முதன்முதலில் எழுதிய சோர்வும் நம்பிக்கையின்மையும் நிறைந்த கடிதத்தை நினைவுகூர்கிறேன். நெடுந்தொலைவு வந்துவிட்டிருக்கிறீர்கள். இது ஒரு வெற்றி, ஒரு தொடக்கம். செல்ல நெடுந்தொலைவு எஞ்சியுள்ளது. வாழ்த்துக்கள்

நடைமுறைத்தளத்தில் இலக்கியமும் அறிவியலும் இணைந்தே செயல்படமுடியும். ஒன்றில் ஏற்படும் சிறு சலிப்பை அல்லது ஊக்கக்குறைவை இன்னொன்றை வைத்து சமன்செய்துகொள்ளலாம். அது ஐன்ஸ்டீன் உட்பட அறிவியல் மேதைகள் கூட கைகொண்ட முன்னுதாரணமான வழிமுறை என நான் அன்று எழுதியதை மீண்டும் கூறுகிறேன்.

ஜெ

லாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்

ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்

பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்

முந்தைய கட்டுரைஎழுகதிர்நிலம், கடிதம்
அடுத்த கட்டுரைசமயவேல்