2.0 ஓர் ஆய்வு

அன்புள்ள ஜெ

நலமா?

வழக்கம் போல சில ஆய்வு கட்டுரைகளை இணையத்தில்  தேடிக் கொண்டிருந்தேன் . தேடல் இடையே Signe Cohen (இணைப்பேராசிரியர் , சமயத்துறை , Missouri  பல்கலைக்கழகம் ) எழுதிய Dharma : Enthiran 2.0 என்னும் ஆய்வுக்கட்டுரை கண்ணில் பட்டது . Cohene ஹிந்து , பௌத்த மதங்களில் உள்ள இயந்திர மனிதர்களை குறித்து ஆய்வுகளில் இப்போது ஈடுபட்டிருக்கிறார் . முன்னர் உபநிடங்களின் காலம் குறித்து ஆய்வுகளை செய்துள்ளார் .

பின்காலனித்துவம் போலவே Post Humanism மும் (பின் மானுடத்துவம்) இப்போது கல்விப் புலங்களில் அதிகம் விவாதக்கப்படும் கோட்பாடு . மேற்குலக சிந்தனைகளை கட்டுடைக்க நல்ல கருவி .

Post Humanism அத்வைத வேதாந்தம் ஆகியவற்றின் அடிப்படைகளைக் கொண்டு (இவை இரண்டும் தொடர்புடையவை என்கிறார்) 2.0 வை புரிந்து கொள்ள முயல்கிறார் . ஏராளமான கல்விப் புலம் சார்ந்த தேய்வழக்குகளும் போதாமைகளும் விபரீத புரிதல்களும் இருந்தாலும் குறிப்பிடத்தக்க முயற்சி என்று எண்ணுகிறேன் .ஆகவே

உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

நன்றி

அனீஷ் க்ருஷ்ணன் நாயர்

 

religions-13-00883 (1)

முந்தைய கட்டுரைபேரரசன் அசோகன் : தொலைந்த நிலையும், மீட்ட கதையும்-கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஇந்து மதாபிமான சங்கம்