அகழ், அஜிதன் கதையுடன்

அஜிதனின் இன்னொரு கதை, ’பஷீரிய அழகியல்’ என மலையாளத்தில் சொல்வார்கள். எளிமை, தெளிவு, அழகு ஆகியவற்றுடன் இரண்டாவது கவனத்தில் மட்டுமே பிடிகிடைக்கும் நுட்பங்களும், வாழ்க்கை பற்றிய முழுமைநோக்கும் வெளிப்படுவது அது. படிமங்கள், அவை படிமங்களென தன்னை காட்டாமலேயே நிகழ்வது.

அகழ் இவ்விதழில் சந்தைத் தெருவில் ஸ்பினோஸா என்னும் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் கதையை பாரி மொழியாக்கம் செய்துள்ளார். விஷால்ராஜாவின் திருவருட்செல்வி கதை வெளியாகியுள்ளது. இசை, ஏ.வி,மணிகண்டன், ஷங்கர் ராமசுப்ரமணியன், அ.க.அரவிந்தன் ஆகியோரின் கட்டுரைகள், உமாஜியின் கதை, நெற்கொழுதாசன் கவிதைகள், சாம்ராஜின் நாவல் பகுதி என இலக்கிய வாசகர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை அளிக்கும் இதழாக வெளிவந்துள்ளது.

அகழ் மின்னிதழ் 

முந்தைய கட்டுரைஏழாம் உலகம், நான் கடவுள், The Abyss
அடுத்த கட்டுரைபொலிவன, கலைவன – கடிதம்