என் சேகரிப்பில் உள்ள தத்துவம் சார்ந்த மற்றொரு முக்கிய நூல் இது. சோ ந. கந்தசாமி அவர்கள் எழுதிய இந்த _பௌத்தம்_ நூல், சமயவியல், பிரபஞ்சவியல், அறவியல், தருக்கவியல், தத்துவவியல் எனும் ஐந்து அத்தியாயங்கள் கொண்டது.
இந்த நூலின் தனித்துவம் என்பது இது தமிழ் நிலத்தின் பௌத்தம் சார்ந்து எழுதப்பட்டது என்பதே.
இதில் முதற் கட்டுரையில் பௌத்த நெறியில் பரம்பொருட் கொள்கை இடம் பெற்ற திறமும், பௌத்த தெய்வங்களின் நிலையும், பத்தி மார்க்கமும், போதிசத்துவக் கொள்கையும், துறவு நெறியும் பிறவும் ஆராயப்பெறுகின்றன. அடுத்து வரும் இரு கட்டுரைகளில் பௌத்தப் பிரபஞ்சக் கொள்கையும், அறங்களும் விளக்கப்பெறுகின்றன. இறுதிக் கட்டுரைகள் இரண்டும் பௌத்த தருக்கம், தத்துவம்பற்றிய கோட்பாடுகளை ஆராய்ந்துணர்த்துகின்றன. தமிழிலக்கியத்தில் காணப்பெறும் பௌத்தம்பற்றி எழுதப்பெற்றுள்ள இந்நூலில், தெளிவிற்காகவும் விளக்கத்திற்காகவும் பாலி, வடமொழிப் பௌத்த நூல் களின் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. பௌத்தவியல் பேரறிஞர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு நூல்கள் இவ் ஆய்விற்கு மிகுதியும் பயன்பட்டன.
என்று முன்னுரையில் ஆசிரியர் தெரிவிக்கிறார்.
நூலின் சுட்டி கீழே: