பொலிவன, கலைவன – கடிதம்

பொலிவதும் கலைவதும் வாங்க

பொலிவதும் கலைவதும் மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெ

அண்மையில் பொலிவதும் கலைவதும் தொகுப்பை வாசித்தேன். உங்களுடைய சிறுகதைகளை, நாவல்களை பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல கதைகள் என் வாழ்க்கையின் அம்சமாகவே மாறிவிட்டவை.  ஆனால் இந்த தொகுப்பின் கதைகளை இப்போதுதான் இத்தனை கவனமாக வாசிக்கிறேன். இந்த கதைகளை நான் அனேகமாக மறந்துவிட்டேன். எல்லா கதைகளையும் வாசித்திருந்தேன். ஆனால் இப்போது வாசிப்பதுபோல கூர்மையாக வாசிக்கவில்லை.

பொலிவதும் கலைவதும் உட்பட எல்லா கதைகளுமே உறவுகளின் மென்மையான விளையாட்டைச் சொல்லும் கதைகள். பொலிவதும் கலைவதும் கதையிலுள்ள அந்த சோகமும் அது வெறும் ஒரு காட்சியாகவே வெளிப்பட்டிருக்கும் அழகும் அபாரம். நான் திரும்பத் திரும்ப இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கதை எழுதுபவர்களுக்கு ஒன்று தெரியவேண்டும். அவர்கள் உருவாக்கவேண்டியது அழகை. வடிவ அழகு, மொழியழகு, பார்வையின் அழகு இப்படி பல அழகுகள் உள்ளன. பலசமயம் கதைகள் சொரசொரவென கரடாக உள்ளன. வாசித்தாலே எரிச்சல்தான் வருகிறது. இந்தக் கதைகளெல்லாமே மஞ்சாடி மணிகளை ஒரு சின்ன சம்புடத்திற்குள் போட்டு வைத்திருப்பதுபோல் இருக்கின்றன. அழகான கதைகள். அடிக்கடி திறந்து திறந்து பார்க்கவைக்கும் அழகு கொண்ட கதைகள்.

இந்தக் கதைகளில் அதிகம் பேசப்படாத நிறைய அற்புதமான படைப்புகள் உள்ளன. தவளையும் ராஜகுமாரனும் அப்படிப்பட்ட ஒரு கதை. அதேபோல ஆட்டக்கதை. என்ன ஒரு விசித்திரமான கதை. அந்தக்கதையின் களமும் அழகாக உள்ளது. அதேபோல வனவாசம். ஒரு கனவுமாதிரியான கதை அது. கதைகளை வாசிக்க வாசிக்க ஒரு இனிப்பு டப்பாவையே சாப்பிட்டு முடிப்பதுபோல ஒரு பெரிய இனிமையான அனுபவமாக இருந்தது.

சரண்யா குமார்

பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் முன்னுரை

முந்தைய கட்டுரைஅகழ், அஜிதன் கதையுடன்
அடுத்த கட்டுரைதிருப்பூந்துருத்தி -வெங்கி