குற்றத்தின் ஊற்றுமுகங்கள், கடிதம்

ஐந்து நெருப்பு வாங்க

ஐந்து நெருப்பு மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெமோ

அண்மையில் சினிமா நண்பர் ஒருவர் சொன்னார். ஐந்து நெருப்பு என்ற ஒரு தொகுப்பிலுள்ள கதைகளுக்காகவே ஜெமோ பல லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டார் என்று. வெந்து தணிந்தது காடு தவிர மேலும் இரண்டு கதைகள் சினிமாவுக்கான உரிமைகள் அளிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி.

தொகுப்பை அதன்பிறகுதான் வாங்கி வாசித்தேன். ஐந்து நெருப்பு சினிமாவுக்கான கதைதான். ஆனால் அதைவிடவும் தீவிரமாக சினிமாவாக எடுக்கத்தக்க பலகதைகள் உள்ளன. எல்லாமே குற்றம் சார்ந்த மனோநிலைகளை நுட்பமாக ஆராயும் கதைகள். ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு நல்ல சினிமாவை உருவாக்கமுடியும்.

குறிப்பாக இழை, பேசாதவர்கள் இரண்டுமே மிகச்சிறந்த சினிமாவுக்கான கதைக்கட்டமைப்பும் நுட்பமும் கொண்டவை. அவற்றையும் சீக்கிரமே வாங்கிவிடுவார்கள். (அல்லது ஏற்கனவே வாங்கிவிட்டார்களா?)

இந்தக்கதைகளிலெல்லாம் உள்ளது குற்றத்தைச் செய்பவனின் மனநிலையை நோக்கிய ஒரு பயணம்தான். அதேசமயம் கதைகள் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளன. மிகத்தீவிரமான சம்பவங்கள் சிறுகதை வடிவிலே சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. பேசாதவர்கள் கதையை ஒரு நாவலாகக்கூட எழுதியிருக்க முடியும்.

அன்புடன்

ஜெயக்குமார் அருண்

முந்தைய கட்டுரைமார்கழிப்பனியில்…
அடுத்த கட்டுரைபுது வாசகர் சந்திப்பு,கடிதம்