கல்வியாளர் ஜெயபாரதிக்கு கிருஷ்ணய்யர் விருது

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

சமூகச் செயற்பாட்டுக் களத்தில் தொடர்ச்சியாக இயங்கும் ஆளுமைகளுக்கு, முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் பெயரால் ‘நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சுந்தர்லால் பகுகுணா, சபனா ஆஸ்மி, கொடிக்கால் சேக் அப்துல்லா, மருத்துவர் வெ.ஜீவானந்தம் உள்ளிட்ட நிறைய இந்திய ஆளுமைகளுக்கு இதுவரையில் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில், இவ்வாண்டுக்கான  சமூகநீதி அறப்போர் விருது கல்வியாளர் ஜெயபாரதி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாவுடைய கல்விப்பணி எவ்விதத் தேய்வுமின்றி நீட்சியுற்றுள்ளது. எண்ணற்ற சாட்சிமனிதர்களை உருவாக்கி வளர்த்தெடுத்த நல்லாசிரியர் ஜெயபாரதி அவர்கள். மருத்துவர் ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, சமூகப் பணிகளுக்கான அறக்கட்டளையைத் துவங்கி, மருத்துவர் ஜீவா விட்டுச்சென்ற செயற்கனவுகளை நிறைவேற்றும் உளவூக்கத்துடன் தொண்டாற்றி வருகிறார். இவ்விருதளிப்பு கல்வியாளர் ஜெயபாரதி அவர்களின் இத்தனை ஆண்டுக்கால கல்விப் பணிகளுக்காக வழங்கப்படுவதில் நிறைமகிழ்வு அடைகிறோம். உங்களுக்கும் நண்பர்களுக்கு இச்செய்தியைப் பகிர்வதில் இன்னும் மகிழ்வு கொள்கிறோம்.

கல்வியாளர் ஜெயபாரதி நேர்காணல் காணொளி இணைப்பு :

~

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைவிடுதலை என்பது என்ன? நாமக்கல் கட்டண உரை ஒளிப்பதிவு
அடுத்த கட்டுரைவல்லினம், மார்ச் 2023