எழுகதிர்நிலம், கடிதங்கள்

சார்,

எழுகதிர் நிலம் 7, 8 ரகளயாக இருக்கிறது, ஒரே மனநிலையில் எழுதப்பட்டது போல! மேகாலயாவின் சீமான் பற்றிய குறிப்புகள் அபாரம்.

வெண்பனி நிலங்களில் நீங்கள் ஏன் கறுப்புக் கண்ணாடி இடுவதில்லை என்கிற கேள்வி எப்போதும் தோன்றுகிற ஒன்று. தம்பிகளைச் சுமக்கும் அக்காக்களைப் பற்றிய குறிப்பில் இங்கே கலாப்ரியா வந்துவிட்டார்.

விஜயகுமார்.

திரு ஜெ,

தாங்கள் கட்டண உரை ஆற்றச் செல்லும் இடங்களில், அப் பகுதியைச் சேர்ந்த ஆளு மைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி உரை தொடங்கு வதைப் போல ‘எழுகதிர் நிலத்தில்’ ஜஸ்வந்த் சிங் ராவத்தைப் பற்றி எழுதியதை வாசித்து மேல் அதிகமாக அவர் புகைப்படம் மற்றும் திரைப்படத்தை பார்த்ததும், முன்னாள் ராணுவ வீரரான என் தந்தை, திருநெல்வேலி வல்லநாடு வேலன்குளம் என்ற குக் கிராமத்திலிருந்து 60 களில் ராணுவத்தில் சேர்ந்து madaras engr group ல் பயிற்சி முடித்து ஆறரை வருடங்கள் அஸ்ஸாமில் பணியில் இருந்தார்கள். தேர்ந்த இலக்கியம், இசை, இந்திய ஞானம், தத்துவம், காந்தி என  வாசகர்களுக்கு தெரியப் படுத்தி வரும் தாங்கள் இதுபோல் மறக்கப்பட்ட Unsung Hero வைத் தெரியப் படுத்திய தற்கு நன்றிகள்.

அன்புடன்

சேது வேலுமணி,

சென்னை.

எழுகதிர் நிலம்- 9

எழுகதிர் நிலம்- 8

எழுகதிர் நிலம்-7

எழுகதிர்நிலம்- 6

எழுகதிர் நிலம் 5

எழுகதிர் நிலம்- 4

எழுகதிர் நிலம்- 3

எழுகதிர் நிலம் -2

எழுகதிர்நிலம்-1

முந்தைய கட்டுரைமுதற்கனல், மாணவியின் கடிதம்
அடுத்த கட்டுரைதியான வகுப்பு- அறிவிப்பு