மார்கழிப்பனியில்…

1976 ல் எம்.எஸ்.விஸ்வநாதன் சலிப்பூட்டிக்கொண்டிருந்தார் என இன்று சிலர் எழுதுகிறார்கள், ஆகவேதான் இளையராஜாவின் வருகை கொண்டாடப்பட்டது என்பார்கள். ஆனால் உண்மையில் அப்படியா என எனக்கெல்லாம் சந்தேகம்தான். அந்தக் காலத்தில்தான் நான் சினிமாப்பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். எனக்கு எம்.எஸ்.வியின் அரிதான பாடல்கள்கூட இன்னும் தீவிரமாக நினைவில் உள்ளன.

இந்தப் பாடலை அண்மையில் ஒரு சினிமா நண்பர் சொன்னார். இதில் அக்கால இசைப்பதிவுச் சூழல் உள்ளது. அதில் அவருடைய தந்தை இருக்கிறார் என்றார். ஒரு ஃப்ரேமில் எம்.எஸ்.வியின் இசைக்குழுவில் இருந்தவரும் பின்னர் சியாம் என்னும் பெயரில் இசையமைப்பாளராகி முக்கியமான பாடல்களை உருவாக்கியவருமான சாமுவேல் ஜோசப் இருக்கிறார். உற்சாகமான இளைஞராக.

சியாம்  எனக்கு மிகப்பிடித்தமானவர், மலையாளத்தில் அற்புதமான பாடல்களை இசையமைத்துள்ளார். தமிழிலும் மழைதருமோ என் மேகம் போன்ற மகத்தான பாடல்களை அமைத்தவர்.

முந்தைய கட்டுரைஇனிதினிது…
அடுத்த கட்டுரைகுற்றத்தின் ஊற்றுமுகங்கள், கடிதம்