நான் கடவுள்

அன்புள்ள ஜெ, நான் கடவுள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?

குமரன்’
சென்னை

அன்புள்ள குமரன்,

நான் கடவுளின் வசூல் வரைபடத்தை ஒரு வினியோகஸ்த நண்பர் சொன்னார். முதல் மூன்றுநாள் முழுமையான வசூல். பெரிய ‘ஓப்பனிங்’ . ஆனால் படம் பார்த்தவர்களில் பாதிப்பேருக்கு படம் நிறைவை அளிக்கவில்லை. எதுவோ குறைகிறது, எதிர்பார்த்த்துபோல் இல்லை  , அருவருப்பாக இருக்கிறது என்பன போன்ற விமர்சனங்கள் இருந்தன.

ஆனால் அடுத்த வெள்ளியன்று இதழ்களின் விமர்சனங்களால் மீண்டும் கூட்டம் ஏறியது. அடுத்த திங்களில் மீண்டும் சற்றே குறைந்தது. ஆனால் தொடர்ச்சியாக பேசப்படுவதன் வழியாக மீண்டும் ஏறி இப்போது சீராக போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் அது கண்டிப்பாக வெற்றிப்படம்தான், சீராக வசூல் ஏறியே வருகிறது என்று இன்று காலை சொன்னார். தெலுங்கில்தான் படம் தோல்வி என்றார். ஒரு படம் எப்படி எங்கெங்கு எவரெவரால் என்னென்ன காரணங்களுக்காக ரசிக்கபப்டுகிரது என்பதை வினியோகஸ்தர்கள் மூலம் கேட்பது தமிழ் மனம் செயல்படும் விதத்தை அறிவதற்கான ஒரு சிறந்த வழி என்று பட்டது.

http://www.envazhi.com/?p=3624

http://svtcinema.blogspot.com/2009/02/blog-post_946.html
ஜெ

சமீபத்தில் என் கவனத்துக்கு அனுப்பப்பட்ட நான் கடவுள் விமரிசனங்கள் இவை

 

http://www.nilathendral.blogspot.com/

http://valibarsangam.wordpress.com

http://ashokpennathur.blogspot.com/

http://cyrilalex.com/?p=459

முந்தைய கட்டுரைகாவல் கோட்டம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்