தேவதேவன் கருத்தரங்கம்

இவ்வருடத்தைய விளக்கு விருது பெற்ற கவிஞர் தேவதேவனைப்பற்றி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் ஏற்பாடுசெய்யபப்ட்டுள்ளது. நாள் 30-1-2008. இடம் அருள் கௌசானல் அரங்கம். காலை 9.30 மணி

‘கவிதையின் அரசியல்-தேவதேவன்’ என்னும் தலைப்பில் ஜெயமோகன் பேசுகிறார். ச.தமிழ்ச்செல்வன் [முற்போக்கு எழுத்தாளர் சங்கம்] ‘தேவதேவன் சிறுகதைகள்’ என்ற தலைப்பிலும் , நாவலாசிரியர் எம் .கோபாலகிருஷ்ணன் ‘தேவதேவன் கவிதைகளில் இயற்கையின் தரிசனம்’ என்ற தலைப்பிலும் கவிஞர் ராஜ சுந்தர ராஜன் ‘தேவதேவனின் மொழி ஆளுமை” என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். தேவதேவன் ஏற்புரை வழங்குகிறார்

முந்தைய கட்டுரைமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்
அடுத்த கட்டுரைமூதாதையரைத்தேடி