அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தன்னறம் விருதின்பொருட்டு எடுக்கப்பட்ட சு. வேணுகோபால் அவர்களின் ஆவணப்படத்தைப் பார்த்தேன். சில வருடங்களுக்கு முன்பு பதாகை இதழுக்கு அளித்த பேட்டியை நினைவுறுத்தும் வகையிலான விரிவான நேர்காணல். ஒருமணி நேரம் ஒற்றை ஆளாக நின்று தான் எழுத வந்த பின்புலம், வாசிப்பு, வாழ்வில் இலக்கியத்தின் தாக்கம் என விரிவாகச் சொல்லி முடிக்கிறார். வேறெந்தத் தமிழ் எழுத்தாளரும் இத்தனை சொற்களைக் கொட்டியிருக்க இயலுமா எனத் தெரியவில்லை.
ஆவணப்பதிவு நிகழும் இடம் போன்ற ஒன்றில் நான் கால்வைத்ததில்லை. பிளவுண்ட நெடும் பாறைகளும், சிதிலமடைந்த கோவிலும், அக்காடும் காட்டுயிர்களும், அச்சூழலின் ஒலியும் நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான அருஞ்செயலாளர்கள்போல் இவற்றைக் காண தன்னைப் பெற்றவர் இல்லையே என்னும் ஏக்கம் மட்டும் நினைவகலவில்லை.
அவருக்கு வணக்கம்.
விஜயகுமார்.