ஓர் எழுத்தாளர் எழுதியவை இரண்டே நாவல்கள். ஒன்று, அவர் வாழும் காலத்தில் வெளிவந்தது, ஆனால் கவனிக்கப்படவில்லை. இன்னொன்று முப்பதாண்டுகளுக்குமேல் அவருடைய நண்பரின் கையிலேயே இருந்து அவர் மறைந்து இருபதாண்டுகளுக்குப்பின் அச்சேறியது. ஆனால் அவர் எழுதிய எல்லாமே அடுத்த தலைமுறையினரால் விரும்பிப் படிக்கப்பட்டன. அவருடைய நடையும் பார்வையும் காலாவதியாகவே இல்லை. அவர்தான் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்.
தமிழ் விக்கி எம்.எஸ்.கல்யாணசுந்தரம்