கதைகள், கடிதம்

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

பெருங்கை

அன்புள்ள ஜெ,

பெருங்கை வாசித்தேன். யானை ஆழ்உள்ளம். பிரக்ஞை அல்லது உன்மை அல்லது மேல் மணம் என்ற இரு சன்னலையும் அது மறைத்திருக்கிறது. உணவு, பீடி, சுருட்டு, குடி, மீன், குலாங்கள், குளியல் என செய்யப்படும் செயல்கள் அனைத்தும் அதை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டே. ஆசான் அவன் யானையை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று அவனை வழி நடத்துகிறார். ஆசானுடைய

வழிமுறையில் உள்ள கடுமைக்கும் இளம்பாகனிடம் உள்ள மென்மைக்கும் உள்ள வேறுபாடு கதையின் நுன்மையான இடம். யானையை நன்றாக அறிந்ததன் பொருட்டுதான் அவறிடம் அந்த கடுமையுள்ளதா. இன்னும் அடுக்கிவைக்க கற்கள் வேண்டும் என்று சுற்றும் முற்றும் பார்க்கும் யானையின் ஆற்றலையை அறிந்தவர் அவர். அது கொடுக்கும் விலையை அறிந்தவர் அவர். யானையின் இனிமையை மட்டும் அறிந்தவன் அவன். கனவுக்கும் அறிவுக்கும் இடையே உள்ள வேறுபாடை, காதலுக்கும் கடமைக்கும் உள்ள வேறுபாடை பேசுகிறதா இந்த கதை. அல்லது வெளியே தெரிந்த இரு கைகள் வழியாக வெளியே தெரியாத கை ஒன்றை பற்றி பேசுகிறதா. சுந்தரிதான் அந்த யானையா. காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வேறுபாடை இக்கதை பேசுகிறதா. சுந்தரி (அழகு) ஆசானுக்கு என்னவாகவும் மாணவனுக்கு என்னவாகவும், சாத்தியத்துக்கும் என்னவாகவும் நிகழ்வுக்கு என்னாவாகவும் இருக்கிறது என்பதுதான் இந்த கதையா.

**

அஜிதனுடைய ‘ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’ கதையும் வாசித்தேன். அது ஒரு பீல் குட் ஸ்டோரி மட்டும் அல்ல. மேல் மட்டத்தில் அப்படி தோற்றம் அளிக்கும் அந்த கதை ஆழத்தில் வேறு. அறபிழைக்கு பின்னால் உள்ள நியாயத்தையும். ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் உள்ள logic யும் அது பேசுகிறது. அப்பொழுது நியாயம் என்றால் என்ன ஒழுக்கம் அறம் போன்றவை என்ன என்று அந்த கதையின் வாயிலாக எழுப்பிகொள்ள முடியும்.

வாசித்துவிட்டு அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை இதில் இணைக்கிறேன்.

**

அஜிதன், நானும் வாசித்தேன். மிக சிறத்த கதை. நல்லபடியாக கொலை  செய்வதற்காக சிலுவையை தொட்டு ஏசுவிடம் வேண்டிகொள்ளும் இடம் மிக சிறந்த இடம். மிக இயல்பாக குற்றமும் தண்டனையும் நாவலுடன் ஒப்பிட்டு பார்க்கும் கரு. குற்றவாளிக்கும் ஒரு நியாயம் இறுக்கிறது. அந்த நியாயத்திற்க்கு ஒத்துவருவதை வைத்தே அவனுடைய செயல் அமைகிறது. அது பிற கண்களில் தவறாவதே அவனுக்கு தெரிவதில்லை. மாமா பாராட்டும் அதே செயலுக்கு அரசாங்கம் ஜெயிலுக்கு அனுப்பும் மரண தண்டனை விதிக்கும் அல்லது எதிரிகளால் கொல்லப்படுவான், அதே செயலுக்கு ஏசு ஒரு அரை விட்டு சொற்கத்துக்கு அனுப்புவார். நல்ல கதை.

பிரதீப் கென்னடி

முந்தைய கட்டுரைமனசாட்சியும் வரலாறும்- கடிதம்
அடுத்த கட்டுரைருக்மிணி லட்சுமிபதி