நகுலன் நினைவு

நகுலனைப்பற்றித் தமிழில் நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். நகுலனைப்பற்றி அறிந்தவன் என்ற முறையில் அதெல்லாமே நகுலனைப் பற்றி அறியாமல், அவரை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அவர்மேல் தங்கள் சொந்தக்கற்பனைகளை அள்ளிச் சுமத்தும் அபத்தக்களஞ்சியங்கள் என்றே சொல்வேன். இவர்கள் ஒரு கலகக்கார, மிஸ்டிக் கிழவனை அவர்மேல் வரைந்து பார்க்கிறார்கள். இவர்களின் மொழிபெயர்ப்பு ஞானத்தின் எளிய சித்திரங்களை விட இன்னும் ஆழமானது நகுலனின் ஆளுமை

நகுலனை நன்கறிந்த நாஞ்சில் நாடன் அவரது இணையதளத்தில் நகுலனைப்பற்றி எழுதியிருக்கும் கட்டுரையை மீண்டும் வாசித்தேன். அற்புதமான நினைவுக்குறிப்பு. கலைஞனின் நேர்மைக்கும் அவதானிப்புத்திறனுக்கும் உணர்ச்சிகரத்துக்கும் சான்று.