ஆற்றின் கதைகள்

நடந்தாய் வாழி காவேரி வாங்க

நடந்தாய் வாழி காவேரி தமிழ் விக்கி

தி.ஜானகிராமன் தமிழ் விக்கி

கெடிலக்கரை நாகரீகம் தமிழ் விக்கி

சுந்தர சண்முகனார் தமிழ் விக்கி

அன்புள்ள ஆசானுக்கு,

வணக்கம்,  இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வைகை ஆற்றின் கரை வழியாகவே பேருந்தில் செல்லும் போது வைகை ஆறானது நீரின்றி அவற்றில் வளர்ந்து ஆளுயர நின்றிருக்கும் நாணல்கள் எனக்குள் ஒரு சில கேள்வி எழுப்பின. அவற்றை தங்களிடம் பகிர்ந்துகொள்ள (பதில் அறிய) விரும்புகிறேன்.

  • எழுத்தாளர் தி.ஜானகி ராமன் அவர்களின் நடந்தாய்  வாழி காவேரி என்னும் காவிரி ஆற்றின் வழியான  பயணக் கட்டுரை நூல் (படிக்க நிறைவை தந்த புத்தகம்) போன்று வைகை ஆற்றைப் பற்றி  பயணக் கட்டுரையோ , ஆய்வு நூலோ எழுதப்பட்டுள்ளதா?
  • 2) அவ்வாறு வைகை ஆறு வரலாறாகவோ, ஆய்வு நூலாகவோ, பயணக் கட்டுரையாகவோ பதிவு செய்யப்பட்டவில்லை எனில் அதற்கான காரணம்?

அன்புடன் –   வர்ணிகா இளவேனில்.

(தங்களுக்கு முதல் கடிதம் – என் மகளின் பெயரில் கடிதம் எழுதியுள்ளேன் (ராஜ்குமார்))

***

அன்புள்ள ராஜ்குமார்

நடந்தாய் வாழி காவேரி நூலே முறையாக எழுதப்பட்ட ஒன்றல்ல. அதில் பயணத்தேதிகள்கூட இல்லை. தரவுகள் கொஞ்சமாவது சேகரித்திருக்கவேண்டும். காவேரியை ஒட்டி நடைபெற்ற வரலாற்றுநிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கவேண்டும். ஆலயங்களைப் பற்றி சொல்லியிருக்கவேண்டும்,. தி.ஜானகிராமனுக்கு வரலாற்று ஆர்வமில்லை. அவருடையது உரையாடல் சார்ந்த உள்ளம். அது ஒரு புனைவுபோல வாசிக்கத்தக்கது, அவ்வளவுதான்

ஆனால் நானறிந்து வைகை, தாமிரவர்ணி பற்றியெல்லாம் அப்படி ஒரு நூல் எழுதப்பட்டதில்லை. சுந்தர சண்முகனார் எழுதிய கெடிலக்கரை நாகரீகம் என ஒரு நூல் உள்ளது. கடலூர் வழியாக ஓடும் கெடிலம் ஆற்றை ஒட்டி உருவான நாகரீக வளர்ச்சி பற்றியது.

ஜெ

முந்தைய கட்டுரைகீதை, நூல்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைகுமரி – கடிதங்கள்