காந்தியும் அரட்டையும்

சமீபத்தில் நான் விவாதக் குழுமத்தில் நூல்கள் மேற்கோள் காட்டப்படுவது,  அரட்டைகளில் பேசப்படுவது ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி எழுதியிருந்தேன். அதை ஒட்டி ஒரு நண்பர் இந்த இணைப்பை  (செங்கோவி) அனுப்பியிருந்தார். இதில் உள்ள பின்னூட்டங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

இது இன்றைய காந்தி பற்றிய ஒரு விமர்சனம். அந்த விமர்சனக் குறிப்பில் இன்றைய காந்தி எப்படி தன்னுடைய ஐயங்களைப் போக்கியது, எப்படி அவதூறுகளுக்கு ஆணித்தரமான பதில்களைச் சொல்கிறது என்று சொல்லப் பட்டுள்ளது. பின்னூட்டமிட்ட நபர்களுக்கு அதைப் பற்றிய கவலையே இல்லை. அந்நூல் இணையத்தில் உள்ளது என்றும் கட்டுரையில் உள்ளது. அவர்கள் அதே அபாரமான அறியாமையின் தன்னம்பிக்கையுடன் அதே அவதூறுகளை அப்படியே மீண்டும் சொல்கிறார்கள்.

இது நம் வழக்கம். நம்மில் கணிசமானவர்கள் நூல்களை வாசிப்பதில்லை. நீண்ட கட்டுரைகளைக் கூட வாசிப்பதில்லை. செவியில் தற்செயலாக விழும் அரட்டைத் துணுக்குகளே அவர்களின் அறிவுக்கு ஆதாரம். ஆக இங்கே ஒரு கருத்து மேற்கோள்களாக அரட்டையின் விவாதமாக உருமாறாமல் பரவவே முடியாதென்று படுகிறது

 

ஜெ

முந்தைய கட்டுரைஆயிரம்கரங்கள்
அடுத்த கட்டுரைஅனந்தபத்மநாபனின் இன்னொரு செல்வம்