ஆத்மாநாம்

ஆத்மாநாம் மறைந்தபின் இருபதாண்டுக்காலம் பிரம்மராஜன் அவரை தமிழில் நிலைநிறுத்த பங்களிப்பாற்றியிருக்கிறார். கவிஞர்களுக்கிடையே அத்தகைய நட்பு உலகமெங்கும் காணப்படுவதும்தான். ஆனால் ஆத்மாநாம் பற்றிய தகவல்கள் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. அவருடைய பெற்றோர் பற்றிய செய்திகளை தேடிச் சலித்துவிட்டோம். ஆத்மாநாம் மறைவுக்குப்பின் எழுதப்பட்ட நினைவுக்குறிப்புகள் மிகப்பெரும்பாலும் மிகமேலோட்டமானவை. பொத்தாம்பொதுவான சில வாசகங்கள். அது இயல்பே. புனைவெழுத்தாளன் அன்றி எவரும் எதையும் புறவயமாகக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய ஒரே ஒரு நினைவுக்கட்டுரை மட்டுமே அவ்வகையில் முக்கியமானது

ஆத்மாநாம்

ஆத்மாநாம்
ஆத்மாநாம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாமம், உணவு, யோகம்- விளக்கம்
அடுத்த கட்டுரைஎழுகதிர் நிலம் 5