குகநாதீஸ்வரர்

கன்யாகுமரி செல்பவர்கள் பெரும்பாலும் செல்லாத ஓர் இடம் கன்யாகுமரி குகநாதீஸ்வரர் ஆலயம். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்று. சோழர் காலத்த்துக்கு முந்தியது. தலபுராணத்தில் இது குகன் தன் தந்தையை வழிபட்ட இடம் எனப்படுகிறது. ஆனால் ஆலயத்தின் பழைய கல்வெட்டுகளில் பொந்தீஸ்வரர் என்றே உள்ளது. குகையிலுறையும் ஈஸ்வரன் என்ற பொருளில்.

இந்த ஆலயம் சைவத்தின் வெளிவட்டத்தைச் சேர்ந்த அகப்புறச்சமய மரபுகளில் ஒன்றைச் சார்ந்ததாக இருக்கலாம். சிவனை குகையில் உறைபவன் என்று வழிபடுவது அவர்களின் வழக்கம். கர்நாடக வசனப் பாடல்களில் சிவன் குகையிலுறைபவன் என்றே சொல்லப்படுகிறான். பின்னர் ஆலயம் மைய சைவமரபால் ஏற்கப்பட்டபோது முருகன் வழிபட்ட இடம் என கதை மாறுதலடைந்திருக்கலாம். 

குமரிமாவட்டத்தில் இவ்வாறு சோழர்காலத்தைய, அல்லது அதற்கு முந்தைய சிவன் ஆலயங்கள் பல பின்னர் விரிவாக்கம் செய்யப்படாமல், சிற்றாலயங்களாகவே உள்ளன. அவற்றை தொகுத்து ஆராயமுடிந்தால் இங்கிருந்த சைவ வழிபாட்டுமுறை பற்றிய ஒரு சித்திரம் அமையலாம்

குகநாதீஸ்வரர் ஆலயம்

குகநாதீஸ்வரர் ஆலயம்
குகநாதீஸ்வரர் ஆலயம் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைசெகோவ் கதை
அடுத்த கட்டுரைதமிழ்விக்கியின் உலகம்