தமிழ் நாவலாசிரியர்களில் ஆரணி குப்புசாமி முதலியார் ஒரு முன்னோடி. துப்பறியும் நாவல்களை தமிழில் ஒரு பெரிய வணிகமாக நிறுவியவர் அவர். அவருடைய எழுத்தால் ஆனந்தபோதினி இதழ் ஒரு கட்டத்தில் தமிழின் முதன்மையான இதழாக விற்கப்பட்டது. பிற்காலத்தைய மேதாவி முதல் ராஜேஷ்குமார் வரையிலான துப்பறியும் நாவலாசிரியர்களின் குலகுரு என அவரைச் சொல்லலாம்.
தமிழ் விக்கி ஆரணி குப்புசாமி முதலியார்