அறிஞர்களை நினைவுகூர்வதன் வழியாகவே அறிவியக்கத்தை நிலைநிறுத்த முடியும். அ.இராகவனை நினைவில் நிறுத்தவேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் திராவிட இயக்கத்தவர். ஆனால் அவர் நேரடியான கட்சிப்பணி செய்தவர் அல்ல. மிகைகளையும் திரிபுகளையும் முன்வைத்து உணர்ச்சிகளை தூண்டியவரும் அல்ல. தமிழ்ப்பண்பாட்டை பல்வேறு பொருட்களின் வரலாற்றினூடாக ஆய்வுசெய்து ஒரு சித்திரத்தை உருவாக்கிய அடிப்படை ஆய்வாளர் அவர். ஆகவே அவர் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டார். அவரைப்போன்றவர்களை முன்வைப்பதுதான் இன்று அறிவின்மையே தகுதியாகக்கொண்டு கூச்சலிடும் வரலாற்றுளறலாளர்களின் காலகட்டத்தில் வரலாற்றில் மெய்யாக ஆர்வம்கொண்டவர்கள் செய்யவேண்டிய பணி