‘குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது

எம்.ஏ.சுசீலா  மொழியாக்கத்தில் வந்துள்ள பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலுக்கு திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் சிறந்த மொழியாக்கத்துக்கான விருது இவ்வருடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

குற்றமும் தண்டனையும் நெடுநாட்களாகவே பலரால் மொழியாக்கம்செய்யப்பட்டதென்றாலும் முடித்து முழுமையான நூலாக வெளியிட்டவர் சுசீலாதான். சிக்கலான உளவியல் ஓட்டங்கள் கொண்ட இந்நாவலை சரளமாகவும் துல்லியமாகவும் சுசீலா மொழியாக்கம் செய்திருந்தார். பாரதி புத்தக நிலைய வெளியீடாக வந்துள்ளது இந்த நாவல்.

சுசீலா இப்போது  பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவலை மொழியாக்கம்செய்துவருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்  

சுசீலாவின் வலைப்பூ

http://www.masusila.blogspot.com/

குற்றமும் தண்டனையும்

முந்தைய கட்டுரைநூல்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிரைப்பாடலில் ராகங்கள்