பொன்னியின் செல்வன் மேடையில் என்னுடைய 7 நிமிட உரையை பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். 7 நிமிட உரை உலகமெங்கும் புகழ்பெற்று வருகிறது. சுருக்கமாக, ஆனால் முழுமையாக, ஏழே நிமிடத்தில் ஓர் உரையை ஆற்றமுடியும். கவனச்சிதறல் இல்லாமல் ஒரு விஷயத்தை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு அது மிக உதவியான ஒரு வழி.
அப்போது நண்பர்கள் அந்த வகையான உரைக்கான ஒரு பயிற்சிவகுப்பு வைத்தாலென்ன என்று கேட்டனர். வரும் 2023 , ஜனவரி 20, 21, 22 (வெள்ளி, சனி, ஞாயிறு) தேதிகளில் ஒரு பயிற்சி வகுப்பு முகாமை ஒருங்கிணைக்கவிருக்கிறேன். முப்பதுபேர் பங்கெடுக்கலாம். முழுமையாகப் பங்குகொள்ளவேண்டும். கட்டணம் உண்டு, கட்டணம் கட்டமுடியாதவர்கள் அறிவித்தால் பணம் ஏற்பாடு செய்யமுடியும்.
மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ளோர் பெயர், வயது, தொலைபேசி எண், ஊர் ஆகிய தகவல்களுடன் [email protected] என்னும் விலாசத்திற்கு எழுதலாம்
ஜெ