சாகித்ய அக்காதமி விருதுகள்

மு.ராஜேந்திரன் தமிழ் விக்கி

சாகித்ய அக்காதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காளையார்கோயில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி நாவலுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நூல் எழுதப்பட்டுள்ளது.

மு.ராஜேந்திரன் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. அவருடைய வடகரை என்னும் நாவலை நான் வாசித்துள்ளேன். ஓரளவு அவருடைய குடும்ப வரலாறு என சொல்லத்தக்க அப்படைப்பு ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய ஆக்கம். அதை எழுதியுள்ளேன். மற்ற ஆக்கங்களை வாசித்ததில்லை.

மு.ராஜேந்திரன் அ.வெண்ணிலாவுடன் இணைந்து வந்தவாசிப் போர் என்னும் வரலாற்றாய்வு நூலை எழுதியவர். ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகளை பதிப்பித்தவர்.

மொழியாக்கத்துக்கான விருது கே.நல்லதம்பி அவர்களுக்கு, நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய  யாத் வஷேம் என்னும் நூலின் மொழியாக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மு.ராஜேந்திரன், கே.நல்லதம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு நிரல்குழு போட்டி
அடுத்த கட்டுரைரத்தசாட்சியின் வெற்றி