வெண்முரசு நிரல்குழு போட்டி

அன்புள்ள ஜெ,

நலமா? விஷ்ணுபுரம் விழா சிறப்பாக நடைபெற்றதை அறிந்து மகிழ்ச்சி.

இந்த வருடத்திற்கான வெண்முரசு நிரல்குழு போட்டி குறித்த தகவல்கள் பகிர்வதற்காக இந்த கடிதம். போட்டியை டிசம்பர் 31 அன்று நடத்துகிறோம். அன்று காலை 8:00 மணிக்கு போட்டி விதிகள் அறிவிக்கப்பட்டு இரவு 8:00 மணிக்குள் நிரல்களை சமர்பிக்க வேண்டும். போட்டிக்கான ஏற்பாடுகளை பிஎஸ்ஜி கல்லூரி பேராசிரியர்கள் சாராதாம்பிகை மற்றும் வைரம் செய்கிறார்கள். இருவருக்கும் நன்றி.
விவரங்களுக்கு: https://vpt.ai/2022/12/20/2022-vpt-contest/

சென்ற ஆண்டு போட்டியில் பங்கு பெற்றவர்களை வைத்து சில கணினி திட்டங்களை துவங்கினோம். மொத்தம் ஆறு குழுக்கள். நான்கு மாதங்கள். நிரல் போட்டியில் முதல் இரண்டு பரிசு பெற்ற குழுக்கள் ஒரு மாதம் பங்கெடுத்தபின் தொடரவில்லை. மூன்றாம் பரிசு பெற்ற குழுக்கள்தான் தொடர்ந்து பங்கெடுத்தன. நிரல் போட்டியில் அவர்கள் சமர்பித்த நிரலின் தரம் சுமார், ஆனால் நான்கு மாதங்கள் தொடர்ந்து செயல்பட்ட பின் அவர்களுடைய நிரல் எழுதும் திறன் மேம்பட்டது. ஒரு குழுவாக எப்படி வெற்றிகரமாக செயல்படுவது என்பதையும் கற்று கொண்டார்கள். செப்டம்பர் மாதம் அகில இந்திய அளவில்  நடைபெற்ற “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டியில் முதல் பரிசு (ஒரு லட்ச ரூபாய்) வென்றார்கள். வெண்முரசு நிரல் போட்டியில் பங்கு பெற்றதும் குறிப்பாக நான்கு மாதங்கள் தொடர்ந்து செயல்பட்டதும்தான் அகில இந்திய போட்டியில் வெல்வதற்கு ஒரு காரணம் என்று அந்த மாணவர்கள் சொன்னார்கள்.

சுட்டிகள்:

https://www.linkedin.com/posts/akash-s-p_smartindiahackathon2022-psgct-activity-6969270733847875584-4nxo?utm_source=share&utm_medium=member_desktop

https://twitter.com/spakash182/status/1566960881866608642

இந்த வருடம் நிரல் போட்டி முடிந்தவுடன் பரிசு கிடையாது. தொடர்ந்து நான்கு மாதங்களும் கணினி திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டால்தான் பரிசு. பரிசுத்தொகை: 25,000 ரூபாய். ஏற்கனவே துவங்கிய கணினி திட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த கணினி திட்டங்கள் இருக்கும். திட்டங்களை பற்றி https://vpt.ai/ தளத்தில் பதிவிடுகிறோம். மேலும் மதுசூதனன் சம்பத்திடமும் ஆலோசனைகளை பெற்று தமிழ்.விக்கி தொடர்பான தொழில்நுட்ப திட்டங்களையும் சேர்க்கிறோம்.  சென்ற ஆண்டு உங்கள் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பை பார்த்து அருள்ராஜ் மகேந்திரராஜனை தொடர்பு கொண்டார். இப்போது அருள்ராஜ், திரு மற்றும் விஜயபாரதிதான் தமிழ்.விக்கி தொழில்நுட்ப குழுவின் மையம்.

நம் வாசகர்களில், NLP துறையில் அனுபவம் உள்ள நண்பர்கள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும். We are looking for mentors. Please reach out to us – [email protected] – If you have:

  • Working experience (at least 2 years) in NLP for Indian languages, especially Tamil.
  • Understanding of state of the art methods and models in NLP:
    — For example, how multilingual models work, what is multi-task training, exploiting information from high-resource languages for low-resource languages.
    — Understanding on how Transformer-based attention models work.
  • Interest in mentoring students for open source Tamil NLP projects (mostly during weekends).
  • [Bonus] If you have open source contributions, experience in publishing research works.

கல்லூரி பேராசிரியர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த நண்பர்களின் உதவியும் கிடைக்கும் போது போட்டியை விரிவுபடுத்துவோம். உங்கள் ஆசிகளும், ஆலோசனைகளும் வேண்டும் ஜெ.

அன்புடன்,

விசு & மகேந்திரராஜன்.

https://visu.me/

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா
அடுத்த கட்டுரைசாகித்ய அக்காதமி விருதுகள்