விஷ்ணுபுரம் விழா 2022, கடிதங்கள்

குளச்சல் மு.யூசுப்- நடத்துபவர் அழகியமணவாளன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

தூரன் விருது விழாவில் சாருவிற்கு விருது தரப்படுவதன் பொருட்டு அமர்வுகளில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து விவாதிக்கப்பட்ட போது என்னுள் தோன்றியது இது ஒரு சுருதி பேதம் என்பது தான். விக்கிரமாதித்யன் வரையிலான விருதுகளில் ஏற்படாத சர்ச்சை இதில் நிச்சயம் இடம் பெறும் என்று நினைத்தேன். இதுவே சுருதி பேதமாக எனக்கு தோன்றியதன் காரணம். முற்றிலும் மாறுபட்ட இரண்டு சிந்தனைப் பள்ளிகள் இரு வேறு எழுத்து முறைகள் முரணியக்கத்தின் வழியாக ஒத்திசைவு காண முடியும் என்பதையே பலரால் புரிந்து கொள்ளவோ அல்லது புரிந்தும் ஏற்கவோ முடியவில்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இதை எழுதும் நான் உட்பட உங்களின் பல வாசகர்களை இது உறக்கத்தில் இருந்து எழுப்பியது. சாருவிற்கு ஜெயமோகனின் இந்த அங்கீகாரம் இனி வரும் காலங்களில் தான் தீவிர இலக்கிய வட்டங்களில் மிகவும் காத்திரமாகப் பேசப்படும். ஜெயமோகன் ஒரு புதிய போக்கை உருவாக்கி விட்டாரா அல்லது இது மணிக்கொடி இயக்கப் போக்கின் தொடர்ச்சியா?

அகரமுதல்வன் அரங்கு, நடத்துபவர் விக்னேஷ் ஹரிஹரன்

கலகம் கட்டற்றப் போக்கு மற்றும் மரபை உள்வாங்குதல் ஆகியவை ஒன்றிணைந்து செல்ல முடியுமா அல்லது இருள் என்றால் அந்த கண்களால் ஒளியைக் காண முடியாது என்றோ அல்லது இதற்கு நேர் எதிராகவோ கூற முடியுமா இதில் நாம் தீர்ப்பிடுதற்கு முன் கவனிக்க வேண்டியது ஜெ மற்றும் சாருவின் இலக்கியச் செயல்பாடு என்பது continuously evolving process என்பது தான்.

கடந்த கால சண்டைகளை எடுத்து வைத்தே பலரும் தங்கள் எதிர்ப்பு மற்றும் கண்டணத்தைப் பதிவிட்டனர். நான் அவற்றை ஜெயமோகன் மற்றும் சாருவின் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் அல்லது வேறு எந்த துருவ எழுத்தாளர்களின் வளர்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாகவே காண்கிறேன். ஆனால் அவ்வாறு நேர்மறையாகக் காண முடிவதின் காரணம் ஜெவும் சாருவும் இன்று வந்தடைந்துள்ள இடத்தின் காரணமாகத் தான் என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு அடையாத எதுவும் பொருட்படுத்தத் தக்கவையாகவும் இருந்திருக்காது. நம் இலக்கிய நுண்ணுணர்வுகளுக்கு சவால் விடும் விழா இது. அதை மறுவரையறை செய்யக் கோருகிறது. மாஸ்டர்கள் அவ்வாறு தான் உங்களை உறங்க விடவே மாட்டார்கள். இரு துருவ தீவிர இலக்கியச் செயல்பாடுகள் சந்தித்து ஒன்றை ஒன்று சமன் செய்த நிகழ்வு இது. இது சுருதி பேதமல்ல ஜூகல் பந்தி

என்று தெளிவுற வைத்தது.

சிவக்குமார் ஹரி

சென்னை

நிர்மால்யா, யூசுப்பை கௌரவிக்கிறார்

அன்புள்ள ஜெ

இவ்வாண்டுதான் நான் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மொத்த audience focus ம் அதில் பங்கேற்கும் இலக்கியவாதிகளை நோக்கியே அமைந்திருந்தது. நீங்களும் எங்களைப்போல வாசகர்களில் ஒருவராக அமர்ந்து வாசகராகவே அவ்வப்போது (scarcely) விவாதங்களில் கலந்துகொண்டீர்கள்.  விழாவில் முன்னிறுத்தப்பட்ட எல்லா இளம் எழுத்தாளர்கல் மீதும் deep reading நிகழ்ந்தது. ஒவ்வொரு கேள்வியும் ஆச்சரியமூட்டும் அளவுக்கு ஆழமானவை. ஆனால் எவரையும் hurting and teasing எதுவும் வரவில்லை.

பல கூர்மையான கேழ்விகளில் ஒருசில dismissal இருந்தது என்றாலும் அது அந்த எழுத்தாளர் பதில் சொல்லத்தக்கதாகவே அமைந்தது. விழாவில் பங்கேற்ற மேரி இந்த அளவுக்கு கூர்மையான விமர்சனம் ஆங்கில நூல்களைப் பற்றி இந்திய இலக்கிய விழாக்களில் உருவாவதில்லை என்று சொன்னது உண்மை. நானும் சில இலக்கிய விழாக்களில் பார்வையாளராக கலந்துகொண்ட அனுபவம் உள்ளவள்.

லோகமாதேவி அ.வெண்ணிலாவை கௌரவிக்கிறார்

இந்த விழாவின் முக்கியமான அம்சம் பெண்கள். இலக்கிய விழாவில் இத்தனை பெண்கள் கலந்துகொண்டது மிகப்பெரிய மன நிறைவை உருவாக்கியது. பெண்களினிடம் இலக்கிய நிகழ்வுகளில் அனேகமாக இல்லை என்ற அளவிலேயே இருக்கும்  இலக்கிய விழாக்களில் குடி, பெண்களை எல்லாம் தன் காதலிகளாக பார்க்கும் சிலரின் அவதூறுகள் எல்லாம் சேர்ந்துதான் அந்த விலகலை உருவாக்கின. அதெல்லாம் இங்கில்லை என்பது மிகப்பெரிய விஷயம். ஒரு சூழலை இங்கே உருவாக்க முடிந்தது மிகச்சிறப்பானது. அனைத்துக்கும் நன்றி

பவி

புகைப்படங்கள். மோகன் தனிஷ்க், ஆனந்த் குமார்

முந்தைய கட்டுரைகவிதைகள் மாத இதழ், டிசம்பர்
அடுத்த கட்டுரைஉளுந்தூர்ப்பேட்டை சண்முகம்