இன்று விஷ்ணுபுரம் விருது விழா

இன்று (18 டிசம்பர் 1922) அன்று கோவை ராஜஸ்தானி சங் (ஆர்.எஸ்.புரம்) அரங்கில் விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா நிகழ்கிறது. எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

இவ்விழாவில் அருணாச்சலப்பிரதேசத்தின் முகம் என அறியப்படும் கவிஞர் மமங் தாய் கலந்துகொள்கிறார். எழுத்தாளர் போகன் சங்கர், எழுத்தாளர் காளிப்பிரசாத் ஆகியோருடன் நானும் கலந்துகொள்கிறேன்.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் அரங்கில் இந்தியாவின் நூல்பதிப்பு – மொழியாக்கம் பற்றி கனிஷ்கா குப்தா, மேரி தெரஸி குர்கலங் ஆகியோருடனான ஒரு கலந்துரையாடல் நிகழும். கவிஞர் மமங் தாய், எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆகியோர் வாசகர்களைச் சந்தித்து உரையாடுவார்கள்.

 

 

மாலை 530க்கு எழுத்தாளர் அராத்து இயக்கிய சாரு நிவேதிதா பற்றிய ஆவணப்படம் The Outsider திரையிடப்படும். அதன்பின் விருதுவிழா நிகழும்.

வருகையாளர் அனைவருக்கும் காலை, மதியம், இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் வருக என வரவேற்கிறோம்

ஜெ

முந்தைய கட்டுரைதனிவழிப் பயணி
அடுத்த கட்டுரைஅறிவியக்கத்தில் இணைதல் – கடிதம்