யூசுப், கடிதம்

விஷ்ணுபுரம் விருந்தினர்: குளச்சல் மு யூசுப்  

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

இந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த பெருமை அளிக்கும் விஷயம் மு.யூசுப் அவர்களின் அமர்வு. விஷ்ணுபுரம் மேடையிலே ஒரு மொழிபெயர்ப்பாளர் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். வரும் நாட்களில் குறிஞ்சிவேலன், நிர்மால்யா, நல்லதம்பி போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடமளிக்கப்படவேண்டும். அவர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானது.

மொழிபெயர்ப்பாளகள்தான் தமிழிலக்கியத்தின் நுரையீரல் என்று சொல்லலாம். அவர்கள் வழியாகத்தான் வெளிக்காற்று உள்ளே வருகிறது. நம் மூச்சு வெளியே செல்கிறது. தமிழிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும் கல்யாணராமன், பிரியம்வதா, வசந்தசூரியா போன்றவர்களுக்கும் அரங்கு வைக்கப்படவேண்டும்.

நான் வைக்கம் முகமது பஷீரின் ரசிகன். ஏற்கனவே அவருடைய கதைகளை பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். குகாரி சி.எஸ்.விஜயம் மொழிபெயர்ப்பு செய்து என்பிடி வெளியிட்ட நூலையே நான் வாசித்துள்ளேன். ஆனால் யூசுப் மொழிபெயர்த்த பிறகுதான் வைக்கம் முகமது பஷீர் உண்மையான வடிவிலே தமிழில் அறிமுகம் ஆனார்.

பஷீர் மலையாளத்திலே மாப்ளா வழக்கிலே எழுதுபவர். அவரை இங்கே செந்தமிழிலோ நம்முடைய பேச்சுவழக்கிலோ மொழிபெயர்த்தால் சரியாக வராது. யூசுப் அதை தேங்காப்பட்டணம் மொழியிலே மொழிபெயர்ப்பு செய்கிறர். அது தோப்பில் முகமது மீரான் வழியாக நமக்கு அறிமுகமான மொழி. அதோடு அது மாப்ளா மொழிக்கும் மிக நெருக்கமானது. ஆகவே உரையாடல்கள் நம்பகமாகவும் நுணுக்கமான பகடியெல்லாம் வெளிப்படும்படியாகவும் உள்ளன. பஷீரின் மூலக்கதையை படிப்பதுபோன்றே உள்ளது.

முஸ்லீம்பாஷை என்றால் நமக்கு இங்கே காயல்பட்டினம் பாஷைதான். அதில் அரபு கொஞ்சமாகவே உள்ளது. தேங்காப்பட்டினம் மொழியிலேதான் நல்ல அரபு ஊடுருவல் உள்ளது. அதை அழகாக யூசுப் மொழிபெயர்த்துள்ளார். அந்த மொழிபெயர்ப்புக்காகவே யூசுப் தமிழிலே என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்.

ஜி.சாந்தகுமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
முந்தைய கட்டுரைபோகன் -அபூர்வங்களையும், அபத்தங்களையும் காட்சிப்படுத்தும் கலைஞன்
அடுத்த கட்டுரைநட்சத்திரவாசிகள் – ஆமருவி தேவநாதன்