நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் குலசேகரம் செண்டிரல் திரையரங்கில் பார்த்த ஒரு படம். மிக விரிந்த அகன்மை காட்சிகள் கொண்ட ஒரு பாடல் நினைவிலெங்கோ இருந்தது. சட்டென்று யூடியூபில் கண்டுகொண்டேன். இந்தப்பாடல்தான். டிராலி சிறப்பாகப் பயன்படுத்தபட்டுள்ளது. இவ்வளவு வைட் ஆங்கிளில் டிராலி சாதாரணமாகப் போடமாட்டார்கள். ஒளிப்பதிவு நெல்லை S.S. மணியன்.
படம், பாலாபிஷேகம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியது. இசை சங்கர் கணேஷ். பாடியவர் வாணி ஜெயராம்